மேலும் அறிய

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.! கிரிவலப்பாதையில் கூடுதலாக அடிப்படை வசதிகள்?

திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான கிரிவலப்பாதை கூடுதலாக கழிவறைகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலுக்கு ஒவ்வோரு மாதம் பௌர்ணமி நாட்கள் மற்றும்  வருடத்திற்கு ஒரு முறை வரும் சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் நாட்களில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சிவனே காட்சிதரும் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். அதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.! கிரிவலப்பாதையில் கூடுதலாக அடிப்படை வசதிகள்?

கிரிவல பாதையில் கூடுதல் கழிவறை 

மேலும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பொருட்டு முதலமைச்சரின் செயலாளர் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில் வழிக்காட்டப்பட்டு மேற்கொள்ளபட்ட நடவடிக்கையின் அடிப்படையில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் ஒவ்வோரு 200 மீட்டர் இடைவேளியில் திருக்கோவில் மற்றும் பிற துறைகளுக்கு சொந்தமான 20 இடங்களில் கூடுதலாக கழிவறைகள் அமைப்பதற்கும் ஏற்கனவே உள்ள கழிவறைகளை புதுப்பிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் பார்வையிடப்பட்டது.

மேலும் செங்கம் சாலையில் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக கூடுதலாக பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) உணவு விடுதி மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான இடங்களை அமைப்பதற்கு ஏதுவாக சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திடவும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.! கிரிவலப்பாதையில் கூடுதலாக அடிப்படை வசதிகள்?

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைத்தல் 

 முன்னதாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் வரிசையில் செல்வதற்கு (Queue) வசதிகளை மேம்படுத்திடவும் பிரசாதக் கடைகள் மற்றும் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ரிஷப்,  இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் (திருப்பணிகள்) கே.ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் சுதர்சனன், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சி.ஜோதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

தலைப்பு செய்திகள்

" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget