School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
School Holiday: தீபாவளிக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து அடுத்த விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே குஷி தான். பொதுவிடுமுறை தவிர்த்து தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து வருவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பமேளாவுக்கு நிகரானது
அதாவது மயிலாடுதுறையில் ஆண்டாண்டு காலமாக துலா உற்சவ விழா எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி வடநாட்டின் கும்பமேளாவுக்கு நிகராக நடைபெற்று வருவது வழக்கமான ஒன்று. கங்கை தனது பாவத்தினை போக்கிட வரம் கேட்டபோது சிவபெருமான் வரமளித்ததை அடுத்து ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக பக்தர்களின் நம்பிக்கையாகும். லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா விழாவிற்கு மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடி வருகிறார்கள்.
தீர்த்தவாரி உற்சவம்
இதனை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நவம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை
இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும்.
எனினும், இவ்விடுமுறை உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) இதன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்.
மூன்று நாட்கள் விடுமுறை
இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 16ம் தேதி விடுமுறை திங்கள் கிழமை வருவதால் அதற்கு முந்தைய நாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி விடுமுறையை போன்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















