மேலும் அறிய

" பார் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை " தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது

ரெஸ்ட்ரோ பார் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

"லாட்ஜிக்கு வருமாறு இளம்பெண்ணை வற்புறுத்திய நபர்கள்"

சென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், அரும்பாக்கத்தில் உள்ள ரெஸ்ட்ரோ பாரில் கடந்த ஓராண்டாக பில்லிங் கேஷியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் , கடந்த நவம்பர் 9 - ம் தேதி அந்தப் பெண் தனது இருசக்கர வாகனத்தைத் தரைதளத்தில் நிறுத்தச் சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரும், லாட்ஜுக்கு வருமாறு வற்புறுத்தியதுடன் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரும் மற்றொருவருக்கு உடந்தையாக இருந்து, அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து தரக் குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது , பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பாலாஜி மற்றும் பிரபு குமார் ஆகிய இருவரையும் போலீசார் அடையாளம் கண்டு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

"தவெக கட்சி நிர்வாகிகள்"

விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரபு குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் அண்ணா நகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்தது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பிரபு குமாரை கட்சியில் இருந்து நீக்கி தமிழக வெற்றிக் கழகத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவர் கடந்த நவம்பர் 5 ஆம் தேதியே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தாம்பரம் To செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை என்ன ஆனது? ரயில்வே திட்டத்தில் இவ்வளவு தாமதமா?
தாம்பரம் To செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை என்ன ஆனது? ரயில்வே திட்டத்தில் இவ்வளவு தாமதமா?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி! ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி! ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
உணவக கேஷியரிடம் ரூ.21 லட்சம் மோசடி !! மிரட்டிய தம்பதி - சென்னையில் பரபரப்பு
உணவக கேஷியரிடம் ரூ.21 லட்சம் மோசடி !! மிரட்டிய தம்பதி - சென்னையில் பரபரப்பு
சொத்து பத்திரம் இனி வீடு தேடி வரும்! 48 மணி நேரத்தில் தபாலில் வழங்க தமிழக அரசு அதிரடி திட்டம்!
சொத்து பத்திரம் இனி வீடு தேடி வரும்! 48 மணி நேரத்தில் தபாலில் வழங்க தமிழக அரசு அதிரடி திட்டம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
Embed widget