மேலும் அறிய

குப்பை எரிஉலைகள்: மக்களின் உயிருக்கு ஆபத்து ! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது: தடை செய்ய வேண்டும் என  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல நலனுக்கும் பெருங்கேடுகளை ஏற்படுத்தும் குப்பை எரிஉலை திட்டங்கள் மிகவும் இன்றியமையாதவை என்றும், அவற்றுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலையும், இயற்கைவளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை இல்லாத இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அதனடிப்படையில் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால், குப்பை எரி உலை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் கழிவுகளை வளமாக மாற்றுவதாலும், நீர், நிலம், காற்று ஆகியவற்றின் மாசுபாட்டை தடுப்பதாலும் இவற்றுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

நிலக்கரி அனல் மின்நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகும். குப்பை எரி உலைகளில் இருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, குப்பை எரி உலையிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு பரவும். இதனால் குப்பை எரி உலைகள் செயல்படும் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நச்சு சாம்பல் கலக்கும். அப்பகுதிகளில் உள்ள உணவகங்களில் தயாராகும் உணவுப்பொருட்களில் கூட விஷச் சாம்பல் படியும். குப்பை எரி உலைகளால் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் இருக்கும் நிலையில் அவற்றை வளப்படுத்தும் அமைப்புகள் என்றும், அவற்றால் நீர், நிலம், காற்று ஆகியவை பாதுகாக்கப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுவது கொடூரமான அமைச்சகம் ஆகும்.

 

சென்னையில் கொடுங்கையூர் பகுதியில் ஆண்டுக்கு 7,66,000 டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மின் உலையை ரூ.1,248 கோடி செலவிலும், அதற்கு இணையான குப்பை எரி உலையை பெருங்குடியிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அந்த பேரழிவுத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தி வருகிறது. மத்திய அரசின் புதிய விதியை பயன்படுத்தி இந்த இரு எரிஉலை திட்டங்களையும் திமுக அரசு உடனடியாக செயல்படுத்தும் ஆபத்து உள்ளது.

குப்பை எரி உலைகளை அமைப்பதை விட, குப்பையில்லா நகரங்களை அமைப்பது தான் சிறந்தது ஆகும். எனவே, நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். இவர் அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget