மேலும் அறிய

NIA Raid: காலையிலேயே பரபரப்பு..! தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை - காரணம் என்ன?

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ சோதனை:

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று, தஞ்சை, மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் நடராஜபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் உசிலங்குளத்தில் பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகி ரஷித் முகமது வீட்டிலும் சோதனை தொடர்கிறது. திருச்ச் மண்டல பிஎஃப்ஐ நிர்வாகியாக இருந்த நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.   கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராமலிங்கம் கொலை வழக்கு:

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பரப்புரையை தடுத்ததாக கூறி 2019-ல் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பாமகவில் நகராட்சி அளவிலான நிர்வாகியாக இருந்த இவர், இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவர் மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட  ராமலிங்கத்தின் கொலை தொடர்பாக, திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து. 11 பேரை கைது செய்திருந்தனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தின. கொலையை கண்டித்து கடையடைப்பு நடந்ததால், பிரச்னை பெரிதானது. 

என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்:

தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே 2019ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு ராமலிங்கம் கொலை வழக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அகமது சாலிக் என்பவரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் அதே ஆண்டு ஜீன் மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து 03.07.2019 அன்று தென்காசியில் உள்ள அகமது சாலிக்கின் வீட்டில் தேசிய புலனாய்வு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான விவரங்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.  சோதனை நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதோடு, மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ராமலிங்கம் கொலை தொடர்பான கொலை வழக்கில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget