மேலும் அறிய
Advertisement
தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் காலமானார்
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்த முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டை சேர்ந்த தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் (90) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள வடக்கூரில் 1937ம் ஆண்டில் பிறந்தார். திமுக உறுப்பினராக இருந்த இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்த முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் 1977 ம் ஆண்டில் திருவோணம் தொகுதியிலும், 1984 ம் ஆண்டு தேர்தலில் திருவையாறு தொகுதியிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் கொறடாவாக பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் இணைந்த இவர் அக்கட்சியின் விவசாய பிரிவு மாநிலச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் துரை. கோவிந்தராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
இவரது மனைவி மீனாட்சி ஏற்கெனவே காலமாகி விட்டார். இவருக்கு மகன்கள் துரை. கோ. கருணாநிதி, துரை. கோ. பாண்டியன், மகள் திராவிடமணி ஆகியோர் உள்ளனர். இவரது இறுதி சடங்கு நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion