Jayakumar Bail sanctioned: 3வது வழக்கிலும் ஜெயக்குமாருக்கு ஜாமீன்.! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரபா, அவரது கணவர் நவீன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன்வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி மார்ச் மாதம் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும், சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு என தனது வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அதனை அடுத்து, காவல் காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பிற முக்கியச் செய்திகள்:
#JUSTIN | மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணியக் கூடாது
— ABP Nadu (@abpnadu) March 11, 2022
- தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்https://t.co/wupaoCQKa2 | #TamilisaiSoundararajan #WomensDay #Womens pic.twitter.com/9S3qxsX8xy
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்