மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

வெளிநாட்டு முதலீட்டில் பின்னடைவு; வீண் விளம்பரங்களை கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குக- அன்புமணி

2024- 25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த  காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், ரூ.8,325 கோடி முதலீட்டுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பின்னடைவு என்றும் வீண் விளம்பரங்களைக் கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’2024- 25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த  காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், ரூ.8,325 கோடி முதலீட்டுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு மேலும் இரு இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனை தமிழ்நாடு இழந்து வருவது உறுதி ஆகியிருக்கிறது.

பத்தில் ஒரு பங்கு மட்டுமே..

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மராட்டிய மாநிலம் மொத்தம் ரூ.70,795 கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. கர்நாடகம், டெல்லி, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன. முதலிடம் பிடித்துள்ள மராட்டியம் ஈர்த்துள்ள முதலீட்டில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 8.8% ஆகும்.  அதன்படி பார்த்தால் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு குறைந்தது 8.8% ஆக  இருந்திருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.19 லட்சத்து 21,607.72  கோடி ஆகும்.  அதில், ஒரு லட்சத்து 69,101 கோடி ரூபாயை ஈர்த்திருக்க வேண்டிய தமிழ்நாடு, கிட்டத்தட்ட அதில் பாதி அளவான  ரூ.92,569 கோடியை மட்டுமே ஈர்த்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் திறனுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் தொழில் முதலீடு அதிகரித்து விட்டது போன்ற பொய்யான பிம்பத்தை விளம்பரங்களின் மூலம் தமிழக அரசு ஏற்படுத்த முயல்கிறது. ஆனால், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 39 மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு வெறும் ரூ.68,145 கோடி மட்டுமே. இது எந்த வகையிலும் பெருமைப்படுவதற்கு ஏற்ற முதலீடு அல்ல.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தின் தொழில் முதலீடு என்பது பெரும்பாலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டையே சார்ந்திருக்கின்றன. திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு முதலீடுகளின் அளவு ரூ.ரூ.68,145 கோடி மட்டும்தான். இதில் பாதியளவுக்கு உள்நாட்டு முதலீடு கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், தமிழகத்தின் மொத்த தொழில் முதலீட்டு வரவு ரூ. 1 லட்சம் கோடி என்ற அளவில்தான் இருக்கும்.

மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சி

ஆனால், இந்த உண்மை நிலையை மறைத்து தமிழ்நாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடு வந்து குவிந்து விட்டதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டதைப் போன்றும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பொய்ப் பரப்புரையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக மாயத் தோற்றம் ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே மராட்டியம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget