Swiggy Delivery Employees: ஸ்விக்கியில் உணவு கிடைக்காது?.. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு மற்றும் இதர பொருட்களை விநியோகிக்கும், ஸ்விக்கி ஊழியர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு மற்றும் இதர பொருட்களை விநியோகிக்கும், ஸ்விக்கி ஊழியர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் அறிவிப்பு:
இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் (CITU) சார்பாக 22.05.2023 முதல் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதென முடிவெடுத்திருக்கிறோம்.
கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் இயக்கங்கள் நடத்தி கோரிக்கை மனு நிர்வாகத்திற்கும் தொழிலாளர் துறைக்கு அனுப்பியும் இதுவரை பேச்சு வார்த்தை மற்றும் எங்களது கோரிக்கை மீது தீர்வு காண இயலவில்லை. ஆகவே வேறு வழியின்றி 22.05.2023 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என 26.04.2023 அன்று நடந்த எங்களது சங்க பேரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வேலை நிறுத்தத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் ஈடுபடவில்லை எனவும், ஒருதரப்பினர் பணிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஓரளவிற்கு மட்டுமே ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு விநியோகிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்:
1. அனைத்து ஊழியர்களுக்கும் பழைய Pay-out முறையை வழங்க வேண்டும்.
2. புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெற வேண்டும்.
3. சீனியர் DE களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மாத ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.
4. ஏற்கனவே வழங்கி வந்த Tum over ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.
5. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும். .
6. ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ.30 வழங்க வேண்டும்
7. பேட்ச் ஆர்டருக்கு ரூ.20 வழங்க வேண்டும்.
8. காத்திருப்பு கட்டணத்தை ஆர்டர் தொகையுடன் இணைக்காமல் தனியாக வழங்க வேண்டும்.
9, Swiggy order வேறு எந்த கம்பெனிக்கும் கொடுக்ககூடாது. Swiggy DE களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும்.
10. Firstmile ஆர்டருக்கு முழுமையான கட்டணத்தை வழங்க வேண்டும்.
11.முறையான காரணம் இல்லாமல் அபராதம் விதிக்கக்கூடாது.
12. உணவகங்களில் உணவு ரெடியாகும் முன்பே உணவு ரெடி என்று கொடுத்துவிட்டு நீண்ட நேரம் கழித்து உணவு கொடுப்பதை சரி செய்ய வேண்டும். அப்படி நேரம் கழித்து கொடுக்கும் உணவுகளுக்கு DE மீது காரணம் சொல்லி அபராதம் போடக் கூடாது.
13. உணவகங்களில் உணவு இல்லை என்றால் ஆர்டர் Rejected போடாமல் கேன்சல் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
14. உணவகங்களில் DE களுக்கு வாகனம் நிறுத்தும் வசதி தருவதோடு உரிய மரியாதையை உறுதி படுத்த வேண்டும்.
15. முன்பு இருந்தது போல நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 reject-களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.
16. Wrong location தூரத்திற்கு டெலிவரி கொடுத்தவுடன் pay-out வழங்க லேண்டும்
17. கஸ்டமர் ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் அதிகபட்சம் 15 நிமிடத்தில் ஆர்டர் கேன்சல் செய்யப்பட வேண்டும்.
18. Last mile-க்கு சரியான கிலோ மீட்டர் வழங்ப்பட வேண்டும்
19. DE களுக்கு விபத்து நடந்தால் சம்பந்தப்பட manager உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட DEகளுக்கு Swiggy செயலில் தேவையான மருத்துவம், Insurance சம்பந்தப்பட்ட உதவிகளை செய்ய வேண்டும்.
20. Instamart-ல் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட 30 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்றக்கோரி, ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.