”இது விஜய்க்காக”.. இப்படியும் ஒரு ரசிகர்.. உடல் தானம் செய்த ரசிகரை கொண்டாடும் ரசிகர்கள்
நடிகர் விஜய் திரையுலகில் 29 ஆண்டுகள் கடந்ததை தொடர்ந்து அவரது ரசிகர் ஒருவர் உடலை தானம் செய்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சினிமா வாழ்வில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் முதல் பல்வேறு திரைபிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆதி.ராஜாராம் என்பவர் விஜய், சினிமாவில் நடிக்கத் தொடங்கி 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து உடல் தானம் செய்வது என்று முடிவு செய்தார்.
Exclusive : Unseen click of our Thalapathy Vijay from @BeastFiIm!
— #BEAST (@BeastFiIm) December 4, 2021
29 YEARS OF THALAPATHY #29YrsOfVIJAYSupremacy #Beast @actorvijay @Nelsondilpkumar @hegdepooja @sunpictures pic.twitter.com/4Mg3FJggxc
இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ஆதிராம், டீன் ரவிக்குமாரிடம் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை அவரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட டீன் ரவிக்குமார், ஆதி.ராஜாராமைப் பாராட்டி அவருக்கான சான்றிதழையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி டீன் ரவிக்குமார்தெரிவிக்கையில், ‘’ஆதி.ராஜாராமின் செயல் வரவேற்கத்தக்கது. இதுபோல் பலரும் முன்வந்து உடல் தானம் செய்யவேண்டும். பொதுவாக, ஒரு கண் தானமாகக் கிடைத்தால் அதன்மூலம் 2 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்யலாம். அதேநேரம், உடல் தானம் செய்தால், அதன்மூலம் ஒரேநேரத்தில் பலரின் வாழ்விலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்று தெரிவித்தார்.
29 Years Of Vijayism Fest 😍🎉 #Beast #Thalapathy66 @BeastFiIm @actorvijay pic.twitter.com/aNmyWHjVnD
— Vijay FC (@TheVijayFC) December 5, 2021
தொடர்ந்து பேசிய அவர், உடல் தானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், உடல் தானம் செய்பவர்கள் உடலை 6 மணி நேரத்துக்குள் கொடுத்துவிட்டால் கண், தோல் என பல உறுப்புகளையும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Master @actorvijay anna ❣️
— தளபதி ᎪꮯꮋᏬ × 𝓓𝓮𝓬𝓪𝓭𝓮𝓼𝓞𝓯𝓥𝓲𝓳𝓪𝔂𝓲𝓼𝓶 (@ThalapathiAchu) December 4, 2021
29 YEARS OF THALAPATHY #29YrsOfVIJAYSupremacy #Beast @actorvijay pic.twitter.com/sL3ovHdZEX
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்