மேலும் அறிய

Ferry Service: நாகை To இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் 10ம் தேதி தொடக்கம்... 3.30 மணி நேரத்தில் பயணம்..டிக்கெட் விலை என்ன தெரியுமா..?

நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும்.

நாகையில் இருந்து இலங்கைக்கு இம்மாதம் 10ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் 6500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட "சிரியாபாணி" என்ற பெயரிடப்பட்ட கப்பல் 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது.
 
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. பின்னர் கடந்த மாதம் 20 ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து  குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகை துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.

Ferry Service: நாகை To இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் 10ம் தேதி தொடக்கம்... 3.30 மணி நேரத்தில் பயணம்..டிக்கெட் விலை என்ன தெரியுமா..?
 
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட "சிரியா பாணி" என்ற கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை  நாகை துறைமுகம் வர உள்ள கப்பலின் சோதனை ஓட்டம் 8 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 10ம் தேதி தொடங்க உள்ளது. KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளது. துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Teachers: இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை

“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!

”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!

Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Teachers: இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை

IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை

Eye Infection : “கண் சிவப்பு, உறுத்தல், எரிச்சல், நீர் வடிதலா?” பரவுகிறது புதிய வகை காய்ச்சல்..!

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?

Embed widget