(Source: ECI/ABP News/ABP Majha)
Krishnagiri Caste Murder : கிருஷ்ணகிரி ஆணவக்கொலை.. இளைஞர் கொலை வழக்கில் மாமனார் நீதிமன்றத்தில் சரண்!
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகன், கொல்லப்பட்ட வழக்கில் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகன் கொல்லப்பட்ட வழக்கில் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் மருமகனை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சங்கர் வாக்குமூலம் அளித்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அணை அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் உறவினர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி டேம் கூட்டுரோடு அருகே ழுழுகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை, ஜெகனா காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்த காதல் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று வேலைக்குச் சென்ற ஜெகனை கிருஷ்ணகிரி அணை கூட்ரோடு அருகே வழிமறித்து, கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மத்தியில் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த கொலை செய்தனர். இதனை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி, நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அணை கூட்ரோடு பகுதியில் இளைஞர் வெட்டி கொலை செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.