மேலும் அறிய

நண்பனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை

நண்பரின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த தேங்காய் வியாபாரி, கல்லால் அடித்துக் கொலை

திருமணத்திற்கு மீறிய உறவு

ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் 26 வயதுடைய கோபிநாத். இவர் ஈரோடு மணல் மேடு பகுதியில் தனது மனைவி மஞ்சு மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தேங்காய் வியாபாரியான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு ரீதியாக பழகி வந்திருக்கிறார்.

எனவே கோபிநாத் அடிக்கடி விவேக் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

மனைவியுடன் பழக கூடாது - எச்சரிக்கை கொடுத்த கணவர்

நாளடைவில் இந்த விவகாரம் குறித்து அறிந்த விவேக் கோபிநாத்தை நேரில் சந்தித்து இனி மேல் தனது மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் கோபிநாத் தொடர்ந்து விவேக்கின் மனைவியுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜீன் - 29 ம் தேதி கோபிநாத் ஈரோடு அருகே சோலார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார்.

இதை அறிந்த விவேக், தனது நண்பர்களான 39 வயதுடைய சரவணன் மற்றும் 39 வயதுடைய சதீஷிடம் தகவல் தெரிவித்து கோபிநாத்தை கண்டிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாஸ்மாக் பாருக்கு சென்ற சரவணன் மற்றும் சதீஷ், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கோபிநாத்திடம் , "விவேக்கின் மனைவியுடன் ஏன் தொடர்ந்து பேசுகிறாய் ? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லால் தாக்கி உயிரிழப்பு

அப்போது வாக்கு வாதம் முற்றிய நிலையில், கோபிநாத்தை டாஸ்மாக் கடை அருகே இருந்த காலி இடத்திற்கு அழைத்துச் சென்று இருவரும் சரமாரியாக தாக்கி, அங்கு கிடந்த கல்லை எடுத்து கோபிநாத்தின் தலை மற்றும் முகத்தில் பலமுறை தாக்கியுள்ளனர். கோபிநாத் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நிலையில், அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்த சரவணன் மற்றும் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த கோபிநாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து தாக்குதலுக்கு காரணமானதாக கூறப்படும் விவேக் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட அவரது நண்பர்களான சரவணன், சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கோபிநாத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த விவேக், சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய மூவர் மீதும் போலீசார் கூடுதலாக கொலை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் கோபிநாத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்த கூலித்தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
கேவலமான பேச்சு.. நீங்க எல்லாம் நாட்டை ஆண்டால் அவ்வளவுதான்.. உதயநிதியை விளாசிய குஷ்பு!
கேவலமான பேச்சு.. நீங்க எல்லாம் நாட்டை ஆண்டால் அவ்வளவுதான்.. உதயநிதியை விளாசிய குஷ்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget