மேலும் அறிய

ராமேஸ்வரத்தில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

வில்லாயுதம்  தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தியதாக மெரைன் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கபட்டிருந்தார்.

ராநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் வில்லாயுதம் என்பவருக்கு சொந்தமான வீடு, தங்கும் விடுதி, மீன் கம்பெனி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் வில்லாயுதத்தின் சொத்து மதிப்பு, வங்கி  வைப்பு தொகை, அவரது தொழில் குறித்து விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரத்தில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் வில்லாயுதம். திமுக மாவட்ட மீனவர் அணி செயலாளராகவும் அப்பகுதியில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் அதிகமாக சொத்துகளை வாங்கி குவிதத்தாகவும் அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என  மத்திய அமலாக்கதுறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை முதல் வில்லாயுதத்திற்கு சொந்தமான வீடு, தங்கும் விடுதி மற்றும்  மீன் கம்பெனி உள்ளிட்ட இடங்களில்  மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் நடத்திய சோதனையில் வில்லாயுதற்கு  எப்படி வருமானம் வருகிறது, தற்போது அவருடைய சொத்து மதிப்பு என்ன உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருவதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

மேலும் தொடர்ந்து அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சொத்து மதிப்பு குறித்து ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனை, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றிய அமலாக்கத் துறையினர் தொடர்ந்து அது குறித்து விசாரணை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமலாக்கதுறையின்  சோதனையின் முடிவில் அவர் மீது வருமானத்திற்கு  அதிகமாக சொத்து சேர்த்ததாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ராமேஸ்வரத்தில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

 

வில்லாயுதம்  தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தியதாக மெரைன் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லாயுதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை அதிரடி  நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகளை அடிக்கடி சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வந்த குற்றத்துக்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் இவரைப் போன்று பலரும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இந்த ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

இதில் வில்லாயுதம் சிக்கும் பட்சத்தில் கடல் அட்டைகள் மற்றும் நட்சத்திர ஆமை கடத்தல் தொழிலில் ஈடுபடும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ரீதியாக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறதா என சில நிர்வாகிகளிடம் கேட்கும்போது சோதனை நடந்து முடிந்த பிறகுதான் கருத்துக்கூற முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Embed widget