மேலும் அறிய

Minister Ponmudi: மீண்டும் விசாரணை வளையத்தில் அமைச்சர் பொன்முடி! ஒருமணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை அதிரடி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை நேரில் விசாரணை நடத்தி வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை நேரில் விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

என்ன வழக்கு?

தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை பொன்முடி வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜூலை மாதம் அமலாக்கத்துறை சோதனை

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது.

விடிய விடிய  7 மணி நேரம் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நடந்த 13 மணி நேர சோதனையை தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் அமலாக்கத் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார். 

இந்த நிலையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு நவம்பர் 24ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதில் நவம்பர் 30ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை நேரில் இன்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் பெறப்பட்டால், விசாரணையின் பிடி இறுகும் என்றும் சட்ட நகர்வு அமையும் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget