ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிவாங்கிய மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி..!
ஆரத்தி எடுத்த இரண்டு ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.
கரூர் புலியூர் டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பாக 2021 கல்வியாண்டிற்கான நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியப் பெருமக்களை பாராட்டும் விதமாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
அவர் வருகைக்காக நீண்ட நேரமாக காத்திருந்த கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர் வருகை புரிந்த உடன் புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கி சிறப்பித்தார் அதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அலுவலரும் புத்தகத்தை வழங்கினார். மாற்ற அரசு அதிகாரிகளும் புத்தகத்தை வழங்க சில கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர்.
அனைத்தையும் பெற்றுக் கொண்ட அமைச்சர் உள்ளே நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் சார்பாக ஆரத்தி எடுக்கப்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி. அவர் அணிந்திருந்த மிதியடியை கழட்டிவிட்டு ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு அங்கு இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.
அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கிணங்க பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற உடனே தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பள்ளி வளாகத்தில் ஆளுயர மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் வகுப்பறைக்கு பாராட்டு விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
அதற்கு முன்பாக திருக்குறள் பேரவையின் நிறுவன தலைவர் மேலை பழனியப்பன் அவர்கள் கரூர் அருகே உள்ள தொன்மை வாய்ந்த தமிழ் ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் விழா நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு பள்ளியின் நிறுவனர்கள் புகைப்படத்தை திறந்துவைத்து நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களை சால்வை அணிவித்து பாராட்டு பத்திரம் வழங்கி தனது வாழ்த்தையும் தெரிவித்தார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பள்ளியில் பயின்ற காலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த செல்வராஜ், படித்த மாணவனே அமைச்சராக மாறி அவர் கையிலேயே தனக்கு இன்று நல்லாசிரியர் விருது பத்திரம் வழங்கப்படுவதால் ஆழ்ந்த சந்தோஷத்தில் இருப்பதாக அங்கு அவரிடம் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பின்பு, அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சென்று விமானம் மூலம் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார்.