மேலும் அறிய

20,000 மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடாதே! தமிழக அரசுக்கு அன்புமணி இறுதி எச்சரிக்கை!

25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வரும் நிலையில், தமிழக அரசு இதுவரை எந்தவொரு உத்தரவாதமும் அளிக்காதது ஏமாற்றமளிக்கிறது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ள நிலையில். அதுகுறித்து அரசுத் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்து விட்ட நிலையில், தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை முந்தைய அரசுகள் ஏற்கவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்; அவர்களுக்கு பதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்புக்காக கோரிக்கை விடுத்தால், பணி நீக்கத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஜூன் 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடந்த 18&ஆம் தேதி மதுரையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்கவில்லை.

மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை விதிகளை பின்பற்றி பணி நிலைப்பு செய்ய வேண்டும் என  பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் 20  ஆண்டுகளுக்கு முன்பு முறையிட்டனர். அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர்.  ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த  தொழிலாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015&ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.

அதை எதிர்த்து மின்வாரியம் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 11  ஆண்டுகளாகியும் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலனில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை இவ்வளவு தான்.

2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முயல்பது நியாயமல்ல. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும்  ஒப்பந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை மின் துறை  அமைச்சர் அல்லது மின் துறை செயலாளர் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி  அளிக்க  வேண்டும்.  அதன் மூலம் ஒரு மாதமாக நீடிக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget