EPS Condemns CM Stalin: ’”நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
EPS Condemns CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிய நீங்கள் நலமா திட்டத்தை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
EPS Condemns CM Stalin: திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்:
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “"நீங்கள் நலமா" என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடிய ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள படத்தில், “பணி நிரந்தரம் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, முதியோர் ஓய்வூதியம் இல்லை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, நீட் ரத்து இல்லை, தாலிக்கு தங்கம் இல்லை மற்றும் மடிக்கணினி இல்லை” என்ற வாசகங்களுடன், #நாங்கள் நலமாக இல்லை - ஸ்டாலின் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் நலமா என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கிவைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
"நீங்கள் நலமா" என்று கேட்கும்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 6, 2024
திரு. @mkstalin அவர்களே-
நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!
சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!
எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு… pic.twitter.com/nTKZWGTtrz
”நீங்கள் நலமா” திட்டத்தின் நோக்கம் என்ன?
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தமிழக அரசால் இதுவரை ’மக்களை தேடி மருத்துவம்'. 'இல்லம் தேடி கல்வி, 'உங்கள் ஊரில் கலெக்டர்', புதுமைப்பெண் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பல திட்டங்கள் தொங்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் பலன்கள் பயனாளர்களை சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், "நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில் முதலமைச்சர் தொடங்கி கடைமட்ட அரசு ஊழியர்கள் வரையிலான அனைவரும், பொதுமக்களை செல்போனில் தொடர்புகொண்டு "நீங்கள் நலமா?" என்று கேட்டு, அரசின் நலத்திட்டங்கள், அரசால் நிறைவேற்றப்படும் சேவைகள் பற்றியும், அது வந்து சேர்கிறதா? என்பது உள்ளிட்ட கருத்துகளை கேட்டறிய உள்ளனர். இந்த நடவடிக்கையால் அரசின் எந்த திட்டத்திலும் முறைகேடு நடக்காமல், அனைத்து குறைபாடுகளையும் களைந்து, அனைத்து பலன்களும் மக்களுக்கு நேரடியாக போய் சேரவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, மக்களின் கருத்துகளின் அடிப்படையில், அரசின் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.