மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : ஊரடங்கால் தேங்கிய விற்பனை : செடிகளிலேயே பூத்து, வதங்கி நிலத்துக்கு உரமாகும் பூக்கள்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலாற்றங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மலர்கள் பூத்து உதிர்ந்து வீணாகி வருகிறது
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலாற்றங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மலர்கள் செடிகளிலேயே பூத்து உதிர்ந்து வீணாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வந்தன. இதன் எதிரொலியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் கடந்த ஒரு வார காலமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது . அதேபோல் வருகின்ற ஏழாம் தேதி வரை மீண்டும் மற்றொரு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய கடைகள் , மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால், இம்முறை அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தள்ளு வண்டிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கும் எதிரொலியாக பூக்கடைகள் , மாலை கடைகள், கோவில் உள்ளிட்டவை மூடியிருப்பதால் பூக்களின் தேவை வெகுவாக குறைந்துள்ளது . இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் விளையும் பூக்கள் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பூக்களின் தேவை குறைந்து உள்ளதால் பூக்கள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பூக்களை குறைவாகவே கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் திருமண விழாக்களும், இதுவரை இல்லாத அளவு மிகவும் எளிய முறையில் நடைபெறுகின்றன. அதேபோல ஊரடங்கும் காரணமாக கோவில் விழாக்களும் நடைபெறுவதில்லை. இதனால், பூக்களுக்கான தேவை குறைந்துவிட்டது. இதன் எதிரொலியாக பாலாற்றங்கரையில் உள்ள பாலூர் , கலிய பேட்டை , காவி தண்டலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை பயிரிட்டு வருகின்றனர். மலர்கள் விற்பனையாகாததால் அவற்றை அறுவடை செய்யாமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர் . சில வகைப் பூக்களை அப்படியே செடியில் விட்டால், அவை அழுகி புழு உருவாகி அதன் மூலம் செடி அழிந்துவிடும் என்ற காரணத்தினால் விவசாயிகள் அந்த பூக்களை பறித்து தங்களுடைய நிலத்திலேயே உரமாக கொட்டி விடுகிறார்கள்.
சில இடங்களில் பூக்களை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் முன்வந்தாலும் பத்து மடங்கு வரை குறைவான விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பூக்களின் விலை பட்டியல் சம்பங்கி கிலோ ரூ.10-க்கும், பட்ரோஸ் கிலோ ரூ.15-க்கும், குண்டுமல்லி, அரும்பு ரூ.50-க்கும் கங்காபுரம் 90 ரூபாய்க்கும் என விலை சரிந்துள்ளது. மிகக்குறைந்த விலைக்கு பூக்களை விற்கும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல் பூக்கள் பறிக்கும் தினக் கூலி தொழிலாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர், இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில் ஒரு கிலோ பூ பறித்துக் கொடுத்தால் பூக்களுக்கு ஏற்றார் போல் பத்து ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை கிடைக்கும் . ஆனால் தற்போது குறைந்த அளவு ஆட்களை வைத்து பூக்களை பறிக்கிறார்கள். ஒரு கிலோ பூக்கள் மிகச் சொற்பமான விலைக்கு விற்கப்படும் காரணத்தினால் மிக.குறைந்த அளவிலேயே கூலி தரப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி சேகர் நம்மிடம் தெரிவிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக மலர் விவசாயம் செய்து வருகிறோம். செடியில் பூவை விட முடியவில்லை அதனால் பூவைப் பறித்து கொட்டி விடுகிறோம் அல்லது கோயில் எடுத்துச் செல்கிறோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் எடுத்துச் சென்று வியாபாரம் செய்யலாம் என்றால் காவல்துறையினர் விடுவது கிடையாது. விவசாயத்தை விட்டால் வேறு வழி இல்லை எந்த விவசாயம் செய்தாலும் நஷ்டத்தில் தான் முடிகிறது என தெரிவித்தார்.
அரசு சார்பில் மலர்களை கொள்முதல் செய்வதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion