HBD CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்.. இந்திய தலைவர்கள் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை அவர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார்.
முன்னதாக மேலும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஜிருல்லா, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் நேரில் வந்து முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது 71ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.#HBDCMMKStalin pic.twitter.com/3qSzXBRUFj
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 1, 2024
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதனைப் பற்றி காணலாம்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமானவாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்