மேலும் அறிய

நாடகமாடும் தமிழக அரசு; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையா?- அன்புமணி கேள்வி

மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று முதல்வர் சொல்வது சரியல்ல. இது நாடகம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

’’பஞ்சாயத்துத் தலைவருக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை வைத்துத்தான் பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று முதல்வர் சொல்வது சரியல்ல. இது நாடகம்’’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை  உடனடியாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. 

ஆனால் மத்திய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும். விதிகளின்படி சாதிவார் கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. 

2021 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவில்லை” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருந்தார். 

இந்த நிலையில் மாநில அரசாலேயே சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் தமிழக அரசு நாடகமாடுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை, தி.நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே மக்கள் நலத் திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களை திரட்டுவதற்காகத் தான். 

பஞ்சாயத்துத் தலைவருக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை வைத்துத்தான் பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று முதல்வர் சொல்வது சரியல்ல. இது நாடகம்.

விவாதத்துக்குத் தயார்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். தேதி இடம் நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Breaking News LIVE: அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை
Breaking News LIVE: அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Seeman speech : கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் அவர்... சீமான் யாரை கூறினார் தெரியுமா ?
கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் அவர்... சீமான் யாரை கூறினார் தெரியுமா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Breaking News LIVE: அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை
Breaking News LIVE: அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Seeman speech : கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் அவர்... சீமான் யாரை கூறினார் தெரியுமா ?
கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் அவர்... சீமான் யாரை கூறினார் தெரியுமா ?
Natty: போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஃபோட்டோகிராபரா? - விளாசிய நடிகர் நட்டி!
போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஃபோட்டோகிராபரா? - விளாசிய நடிகர் நட்டி!
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர்  ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
Keezhadi Excavation:  கீழடியில்
Keezhadi Excavation: கீழடியில் "தா" என்ற தமிழி எழுத்து பொறிப்பு பானை ஓடு கண்டுபிடிப்பு !
T20 World Cup 2024: இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு.. ரிசர்வ் டே இல்லை.. இறுதிப்போட்டியில் யார்?
இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு.. ரிசர்வ் டே இல்லை.. இறுதிப்போட்டியில் யார்?
Embed widget