Dr Ramadoss : தொண்டர்கள் விரும்பிய கூட்டணி அமைப்பேன்! ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
தொண்டர்கள் விரும்பியவாறு நல்ல கூட்டணியை ஏற்படுத்துவேன் பொதுக்குழுவில் நல்ல கூட்டணி அமைக்கிற அதிகாரத்தினை தனக்கு கொடுத்துள்ளதால் அதனை சிறப்பாக செயல்படுத்துவேன் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம் : தொண்டர்கள் விரும்பியவாறு நல்ல கூட்டணியை ஏற்படுத்துவேன் பொதுக்குழுவில் நல்ல கூட்டணி அமைக்கிற அதிகாரத்தினை தனக்கு கொடுத்துள்ளதால் அதனை சிறப்பாக செயல்படுத்துவேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவின் கெளரவ தலைவர் ஜி கே மணி, வன்னியர் சங்க தலைவர் புதா, அருள்மொழி, ராமதாசின் மூத்த மகள் காந்திமதி,பேராசிரியர் தீரன் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு மேடையில் பேசிய மருத்துவர் ராமதாஸ்.,
பொதுக்குழுவில் 7 ஆயிரம் பேர் கூடியது வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் இல்ல சொந்த காசில் வந்தவர்கள், இதுவல்லவா கூட்டம் என ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் சொந்தங்களாக கூடி உள்ளவர்களை எதை சொல்லி பாராட்டுவது கடந்த காலமும் எதிர்காலமும் தொண்டர்கள் தான் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் அல்ல எல்லா மக்களுக்கும் தமிழகத்திற்குமானது பாளையங்கோட்டை ஜெயிலுக்கு போனது ஒரு சாதியினருக்கு மட்டும் அல்ல 324 சாதியினருக்கும் தொடர்ந்து போராடி வருவதாகவும், எல்லா பிரச்சனைக்கும் தொடர்ந்து போராடி வருவதாக கூறினார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுகீடு அதிமுக உடன் கூட்டணி வைத்த போது கொடுத்தார்கள் அதில் 115 சாதிகள் பயன்பெறுகிறார்கள் கலைஞர் கருனாநிதி கொடுத்தலிலும் 115 சாதிகள் பயன் அடைந்துள்ளார்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எல்லாரும் பயனடைய வேண்டுமென கூறிவருகிறோம் எல்லா சமுதாயத்தினரும் என் பின்னாளில் வாருங்கள் எல்லாம் கிடைக்கும் என்றும் எந்த கூட்டணி என ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள், எந்த கூட்டணிக்கு சென்றால் வெற்றி கிடைக்கும் இயற்கையான வெற்றி கூட்டணி எங்கே கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.
தொண்டர்கள் மனங்களில் உள்ளதை நான் அறிவேன் ஏனென்றால் நான் ஒரு மருத்துவர் தொண்டர்கள் விரும்பியவாறு நல்ல கூட்டணியை ஏற்படுத்துவோம் நல்ல கூட்டணி அமைக்கிற அதிகாரத்தினை கொடுத்துள்ளார்கள் அதனை சிறப்பாக செயல்படுத்துவேன் என ராமதாஸ் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென முதலமைச்சரை சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல் எடுத்தேன் ஆனால் அதனை அவர் செய்யவில்லை மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென கூறி தமிழக அரசு தட்டிக்கழிக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பிற்காக போராடாமல் விட போவதில்லை 10.5 என்னாச்சி என சிறியவர்கள் கேட்கிறார்கள் அது என்னவென்றே அவர்களுக்கு தெரியாது ஆனால் அது நிறைவேறும் 10.5 தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் இவ்வளவு கூட்டத்தினை பாமக பொதுக்குழுவில் கண்டதில்லை உணர்ச்சி கொந்தளிப்போடு நிர்வாகிகள் தொண்டர்கள் வந்துள்ளனர். தொண்டர்களை கேட்டு தான் கூட்டணி முடிவு எடுப்பேன் இவ்வளவு பெரிய கூட்டம் பொதுக்குழுவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





















