DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது - உதயநிதி
DMK Youth Wing Maanadu: திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி சேலத்தில் கூடிய இளைஞர் படை டெல்லியில் அமர்ந்திருக்கும் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்கப் போவது உறுதி என கூறினார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில் நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதில் முக்கியமானது குறித்து இங்கு காணலாம்.
1. ஒன்றிய அரசை கேள்விக் கேட்டால் அமலாக்கத்துறை வரும், வருமாவரித்துறை வரும் என மிரட்டுகின்றனர். நாங்கள் EDக்கும் பயப்படமட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். ED மிரட்டலுக்கு திமுக தொண்டர்களின் குழந்தைகள் கூடப் பயப்படாது
2. மாநில உரிமைகளைப் பறிப்பதே ஒன்றிய அரசின் முழு நேர வேலை தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரான பழனிச்சாமி துணையோடுதான் நமது உரிமைகளை ஒன்றிய அரசு பறித்தது
3. கல்வி, சுகாதாரம் எனும் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு பறிக்கிறது. ராணுவம் மட்டும் ஒன்றிய அரசிடம் இருந்தால் போதும்
4. நாம் ஒரு பைசா வரி செலுத்தினால், 29 காசு மட்டுமே
ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது. 9 ஆண்டுகளில் நாம் கட்டிய வரிப்பணம் 5 லட்சம் கோடி அவர்கள் திருப்பித் தந்தது 2 லட்சம் கோடிதான்
5. 2 ஆயிரம் வருடமாய் முயற்சி செய்கிறீர்கள் உங்களால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் வருடமானாலும் வெற்றி பெற முடியாது. தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்கள் எண்ணத்தை தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது
6. சேலத்தில் கூடிய இளைஞர் படை டெல்லியில் அமர்ந்திருக்கும் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்கப் போவது உறுதி
7. இந்தியா முழுவதும் காவிச்சாயம் பூச நினைப்பவர்களை வீழ்த்துவத இளைஞரணியின் லட்சியம். காவி சாயத்தை அழித்து, சமூக நீதி வண்ணத்தை பூசி, எல்லோரும் உறுதியேற்று உழைப்போம்
8. நம் கல்வி, மொழி, நிதி, வேலைவாய்ப்பு ஆகிய உரிமைகளையும், அதிகாரக் குறைப்பு என நம் மீது மிகப்பெரிய பண்பாட்டு ரீதியான தாக்குதல்களை ஒன்றிய அரசு நடத்துகிறது
9. ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு இருக்காரு ஆனா நாம இங்க மாநில உரிமையை காக்க 22 தலைப்புகள்ல நம்முடைய பேச்சாளர்கள் நடத்திய உரை கிழவர் ராமசாமியை நோக்கியுள்ளது
10. இந்த மாநாட்டில் இன்னைக்கு பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் இருந்திருந்தா நாளை முரசொலியில் ஒரு கட்டுரை வந்திருக்கும் அந்த கட்டுரையோட தலைப்பா ’சேலம் மாநாடு நம்முடைய நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மாநாடு’ என்ற தலைப்பு கொடுத்திருப்பாங்க
11. ஒட்டுமொத்த இந்தியாவும் சேலத்தில் நடைபெறும் நமது மாநாட்டை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது
12. இளைஞர் அணி செயலாளராக நான்கரை ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
13. நேர்காணலின் மூலம் உழைப்பின் அடிப்படையில் மாவட்ட மாநகர நிர்வாகிகளை தேர்வு செய்தோம்
14. முரசொலி பாசறை பக்கத்தை சென்ற வருடம் தொடங்கினோம்
15. கலைஞர் நூற்றாண்டில் இளைஞர் அணிக்கு முக்கிய மூன்று பங்கு பணிகள் கொடுக்கப்பட்டது மாரத்தான் போட்டி பேச்சுப் போட்டி கலைஞர் பெயரில் நூலகம்
16. நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்று தலைவரிடம் சொல்லியிருந்தோம் ஆனால் தற்போது 85 லட்ச கையெழுத்திற்கு மேல் பெற்றுள்ளோம்
17. தலைவர் உத்தரவிட்டால் டெல்லிக்கு சென்று அடுத்த கட்ட போராட்டத்தையும் நடத்த இளைஞரணி தயாராக உள்ளனர்
18. தமிழை அழிக்க நினைத்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்
19. மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிதி வழங்க நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதற்கு அந்த அம்மா நாங்க என்ன ஏடிஎம் என்று கேட்டார் அதற்கு தான் நான் இது ஒன்னும் உங்க அப்பா வீட்டு காசு இல்லை என்று சொன்னேன் அதற்கு அவங்க எனக்கு பாடம் எடுத்தாங்க அடுத்த நாளை அவங்க கேட்ட மரியாதையை நான் கொடுத்துட்டேன் ஆனா நம்ம கேட்டா நிதியா அவங்க இன்னும் தரல
புதிய கல்விக் கொள்கையால் ஐந்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கூறப்படுகிறது
20. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் நம் தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக வர வேண்டும் இதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி திமுக இளைஞரணி மாநாட்டில் பேசினார்.