பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்ய திமுக ஆட்சியில் இருக்காது - எடப்பாடி பழனிச்சாமி
வரும் ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்ய திமுக கட்சி ஆட்சியில் இருக்காது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்றார். மேலும், பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுடார். நேற்று திருவெண்காடு, திருக்கடையூர் ஆகிய கோயில்களில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை வைத்தீஸ்வரன்கோயிலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி தற்போது தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். ஆதின வாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ள காலங்களிலும், வறட்சி காலங்களிலும் நிவாரணத்தையும் இழப்பீடும் வழங்கியது அதிமுக அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான கையெழுத்திட்டது திமுக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு. 50 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றது அதிமுக அரசு.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரசு ஆய்வு குறித்து, அறிக்கை அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு? மதம், கோயில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் முழு விவரம் தெரிவிக்கப்பட்ட பின்னர் தான் அறிக்கை வெளியிட முடியும். இது அவர்களைப்போல அரைவேக்காடு தனமாக அறிக்கை வெளியிடக் முடியாது என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர், எல்லா மதமும் சமமாக பார்க்க வேண்டும், மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஆண்டாண்டு காலமாக அவர்கள் வழிமுறையில் நாம் தலையிடக் கூடாது, கோயிலுக்கு என்று என்று வழிமுறைகள் இருக்கிறது, அதற்கென்று சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஆய்வு செய்த பிறகுதான் அறிக்கை வெளியிட முடியும் என்றார்.
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி இந்த ஆண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதால் அனுமதிக்கப்படுகிறது என்றும், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி வரும் ஆண்டுகளில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு வரும் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்றால் பார்த்து கொள்ளலாம். ஆதினத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசாங்கம் மூக்கை நுழைக்க பார்க்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது வருத்த தக்கது. இதற்கு முன் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் தருமை ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடைபெற்று வந்தது. 500 ஆண்டுகாலம் நடைபெற்ற அந்த இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு அதை தடை செய்ய முயற்சி செய்தது அதை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம் என்றும்.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை திறந்தவெளியில் கொண்டுவந்து அடுக்கிவைத்து விற்பனை செய்ய முடியாமல் சேதமடைந்தது. கொள்முதல் செய்த நெல்லையும் அரசு முறையாக பாதுகாக்கவில்லை லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டு இருக்கிறது. விவசாயிகளிடம் முறையாக நெல்கொள்முதல் செய்யாதது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு தேவைக்கு ஏற்ப உரங்களை வாங்கி கையிருப்பு வைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பற்றி தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது, வீட்டைபற்றிதான் தெரியும்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி கல்வி படிக்க வேண்டுமென்று அதிமுக இத்திட்டத்தை கொண்டுவந்தது. அதனை முடக்க நினைத்தனர் அதற்க கடும் எதிர்ப்பு வந்ததால் மீண்டும் இயங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார். சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை அவருக்கும், அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிதான். ஆனால் பிரதான எதிர்கட்சி அதிமுகதான். 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக வாக்கு விகிதம் 3 சதவிகிதம் தான் அதிகமான வாக்குபெற்றது அதிமுகதான் என்றார்.