Vanathi on DMK: பெண்ணின் சேலையை இழுத்த திமுகவினர்.. ட்விட்டரில் கொதித்தெழுந்த வானதி சீனிவாசன்!
சென்னை: மறைமுக தேர்தலின்போது அதிமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகியின் சேலையை பிடித்து இழுத்த திமுகவினருக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு கடந்த 22ஆம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது.
அப்போது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க செல்கையில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது. அதுமட்டுமின்றி அதிமுகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவருடைய சேலையை திமுகவினர் இழுத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து கன்றுக்குட்டியை காப்பாற்றிய அன்பு.. வைரலாகும் நிஜ ஹீரோ..
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பெண்களை திமுக நடத்தும் விதம் வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான அவர்களின் நடத்தை புதிய விஷயம் அல்ல. பட்டப்பகலில், அவர்கள் ஒரு பெண்ணை சீர்குலைக்கிறார்கள்.
Shameful the way DMK treats Women in Tamil Nadu. Their Anti Women behaviour isn't new thing. In broad daylight, they are outraging the modesty of a women.
— Vanathi Srinivasan (@VanathiBJP) October 24, 2021
During assembly election, everyone saw their hate for women in their leader's speech. Now you can witness on roads. pic.twitter.com/qnFYOyDDnV
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அக்கட்சியின் தலைவர்களுடைய பேச்சில் பெண்கள் மீதான வெறுப்பை அனைவரும் பார்த்தனர். இப்போது சாலையில் நடக்க ஆரம்பித்துள்ளது” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கோவை : ”உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால்..” : அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்..
அண்ணாமலை பேர சொல்லி தாக்குறாங்க.. பாஜக மாநில செயலாளர் குமுறல் | BJP | Annamalai IPS |