மேலும் அறிய

MK Stalin: வெறும் 87 ஓட்டு வாங்கிய மு.க.ஸ்டாலின்.. தோற்ற காரணம் இதுதானா? - சம்பவம் செய்த கொளத்தூர் மக்கள்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் என்பது ஆரம்பத்தில் இருந்தே கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இதில் ஒட்டுமொத்த தமிழ்நாடு எதிர்பார்க்காத ஒரு முடிவு கொளத்தூர் தொகுதியில் அமைந்தது. மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளின் பதிவான வாக்குகள் விவரத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்து மே 4ம் தேதி எண்ணப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டமன்ற தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மை இல்லாத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். 

அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின் தோல்வி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் என்பது ஆரம்பத்தில் இருந்தே கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. காரணம் முதலமைச்சர் விஜயின் வருகையாக சொல்லப்பட்டது. தேர்தல் முடிவுகளும் அதனைப் பிரதிபலித்தது. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வென்று இரண்டாமிடமும், அதிமுக கூட்டணி 53 இடங்களில் வென்றும் 3ம் இடமும் பிடித்தது. இதில் ஒட்டுமொத்த தமிழ்நாடு எதிர்பார்க்காத ஒரு முடிவு சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் அமைந்தது. 

திமுக ஆட்சியில் முதமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியிலேயே 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியைத் தழுவினார். இது திமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. பலரால் இன்றளவும் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

கொளத்தூர் தொகுதியில் 2011ம் ஆண்டில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். 2021ல் முதலமைச்சராக ஆன பிறகு அந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது. பல்வேறு நலத்திட்டங்களை மு.க.ஸ்டாலின் செய்தார். ஆனால் அவரின் தோல்வி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்து விட்டது. எனினும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு  கொளத்தூர் தொகுதிக்கு வந்து மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள்

இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொளத்தூர் தொகுதியில் 4ம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் வெறும் 87 ஓட்டுகளை மட்டும் தான் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அதேசமயம் அதே வாக்குச்சாவடியில் வி.எஸ்.பாபு 409 வாக்குகளை பெற்றிருக்கிறார். அந்த வாக்குசாவடியில் மொத்தம் 613 வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் அங்கு 286 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிகப்பட்சமாக 200வது வாக்குச்சாவடியில் மு.க.ஸ்டாலின் அதிகப்பட்சமாக 519 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget