மேலும் அறிய

DMK Women Welfare and Schemes : இலவச பயணம் தொடங்கி மகளிர் மேம்பாட்டில் புதுப்பாய்ச்சல் நிகழ்த்திய திமுக அரசு..!

ஆட்சி பொறுப்பேற்றது முதலே மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட, பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி திமுக தலைமையிலான தமிழக அரசு மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இலவச பயணம் தொடங்கி மகளிர் மேம்பாட்டில் புதுப்பாய்ச்சல் நிகழ்த்திய திமுக அரசு..!

சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் என்பது திமுகவின் கொள்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசு பதவிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, இந்தியாவிலேயே காவல்துறையில் மகளிரை பணி நியமனம் செய்த முதல் மாநிலம், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு என, மகளிர் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. அதே வரிசையில் தான், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும், மகளிர் முன்னேற்றத்திற்கான பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முதல் நாள் முதல் கையெழுத்து:

கடந்தாண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற ஸ்டாலின், முதலில் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதாகும். பல்வேறு விமர்சனங்களுக்கும், மகளிரின் ஒருமித்த ஆதரவுக்கும் இடையே தமிழகம் முழுவதும் இந்த திட்டம், முதலமைச்சர் கையெழுத்திட்ட மறுநாளே அமலுக்கு வந்தது. இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகப்படுத்திய ஒரே ஆண்டிலேயே, அதன் மூலம் 115 கோடி மகளிர் பயனடைந்ததாக அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் மகிழ்ச்சி:

இதுதொடர்பான அறிக்கையின் படி, தமிழ்நாடு முழுவதும் 7,321 பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவற்றில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரையில் நாளொன்றிற்கு 36 லட்சம் மகளிர் என, 115 கோடி பெண்கள் பயணித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1,500 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சமூக, பொருளாதார சூழலில்,  பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கும், வேலைக்கு செல்வதற்கும் இன்றியமையாமல் உள்ள போக்குவரத்து தேவையை அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும், ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிப்பதாக மகளிர் தெரிவிக்கின்றனர். அந்த பணம் தங்களது மற்ற அன்றாட தேவைகளுக்கு உதவிகரமாக இருப்பதாகவும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதுமைப்பெண் திட்டம்:

புதுமைப்பெண் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்படும்  இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது வரை 1.16 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

மகளிர் மேம்பாட்டிற்கான திட்டங்கள்:

இதேபோன்று, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் 8,250 மகளிருக்கு வாழ்வாதாரம் சார்ந்த புதிய வணிக நுண் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதோடு,  மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட ரூ. 2,674 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு அதிகாரத்தை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மகளிரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக 36,321 புதிய சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மகளிர் வாழ்வை வளமாக்க 3,93,580 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 20,479 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிரின் நலம் காக்க 9 மாத பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வண்ணம் 17,192 பெண்களுக்கு, தமிழக அரசு சார்பில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget