மேலும் அறிய

திமுகவைப் பார்த்தால் இன்றைக்கும் பயம் இருக்கு.. தவெகவை அட்டாக் செய்த டிஆர்பி ராஜா!

ஐடி விங் என்பது ஒரு அமைப்பு அல்ல. திமுக இயக்கமே அதனுள் இருக்க வேண்டும் என்பது தான் நோக்கமாகும் என  GEN Z தலைமுறையினர் சந்திப்பில் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். 

75 ஆண்டுகளை கடந்தாலும் திமுக எழுச்சியோடு தான் உள்ளது என்றால் அதற்கு கொள்கைகள் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக களம் கண்ட  திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக மாறியது. அக்கட்சி இப்படி ஒரு தோல்வியை பெறும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் திமுகவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேல்மட்டம் தொடங்கி அடிமட்டம் வரையிலான நிர்வாக மாற்றம், திமுக இன்னும் செய்ய வேண்டியவை என்ன, எங்கு தவறு நடந்தது, சமூக வலைத்தளங்களில் எவ்வளவு ஆக்டிவாக செயல்பட வேண்டும் என பல வகைகளில் மீண்டும் எதிர்கால தேர்தலில் வெற்றி வாகை சூட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  GEN Z கூட்டம் நடைபெற்றது.  இதில் நூற்றுக்கணக்கான திமுகவை தொண்டர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, “திமுக இன்றைக்கு மீண்டும் வென்றுள்ளது என்பதை உரைக்க சொல்லியிருக்கும் உடன்பிறப்புகளுக்கு வணக்கம்.  இது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகும். திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி இல்லையென்பது எனக்கு கஷ்டமாக உள்ளது. 89 வயதில் கருணாநிதி சமூக வலைத்தளத்தில் அமர்ந்து, ட்விட்டர் பயன்படுத்தினார். குறிப்பாக குறை சொல்பவர்கள் கருத்துகளை பார்ப்பார். அப்படியாக திட்டுவதில் பாதி பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். 

இந்த நிகழ்ச்சிக்கு முதலில் 10,15 பேர் மட்டும் தான் சந்திக்கலாம் என சொன்னார்கள். டீக்கடை தொடங்கி ஒரு சிறிய அறை வேண்டும் என கேட்டார்கள். இப்போது பெரிய மண்டபமே பிடிக்கும் அளவுக்கு சென்று விட்டது. ஆனால் அதற்கு வந்த அச்சுறுத்தல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன்மூலம் திமுகவைப் பார்த்தால் என்றைக்குமே பயம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இது மிசாவைப் பார்த்த திமுக. அது இன்னும் சில பேருக்கு தெரியவில்லை. சும்மா விட்டிருந்தால் 50 பேருடன் இந்த நிகழ்ச்சி முடிந்திருக்கும். 

ஐடி விங் என்ன செய்கிறது என கேட்கிறார்கள். ஐடி விங் என்பது ஒரு அமைப்பு அல்ல. திமுக இயக்கமே அதனுள் இருக்க வேண்டும் என்பது தான் நோக்கமாகும். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு கொண்டிருந்தோம். 75 ஆண்டுகளை கடந்தாலும் திமுக எழுச்சியோடு தான் உள்ளது என்றால் அதற்கு கொள்கைகள் தான் காரணம். சிலருக்கு ரொம்ப சுலபமாக ஒன்று கிடைத்து விட்டால் அதன் மதிப்பு தெரியாது என கூறுவார்கள். அப்படித்தான் சில விஷயங்கள் நடந்து விட்டது. ஜென்ஸி இளைஞர்கல் சட்டத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உதயமானால் தமிழ்நாட்டை மீட்டெடுக்கலாம் என டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget