DMK Cabinet Meeting:ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறதா? முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!
CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.இதில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்பு. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்வடிவம், ஏந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு செல்லபப்ட்டுள்ளது உள்ளிட்டவைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதோடு, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச்,5 ஆம் தேதி அமைச்சரசைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரமிக்கு விளையாட்டு தடைவிதிப்பது குறித்த பரிந்துரையை முதலமைச்சரிடம் வழங்கினார் நீதியரசர் சந்திரு குழு.
மேலும், இக்க்கூட்டத்தில் புதிய முதலீடுகள், மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பது, செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்