மேலும் அறிய

Vijay Tamilan Parthiban: அன்று விஜய் படத்தில் வாய்ப்பு.. இன்று அமைச்சரவையில் இடம்.. யார் இந்த சேலம் தமிழன் பார்த்திபன்?

Vijay Tamilan Parthiban TVK Minister: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சேலம் தமிழன் பார்த்திபன், விஜயுடன் 3 படங்களில் நடித்துள்ளார். தற்போது அமைச்சராகவும் மாறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் சேலம் தெற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ.,விஜய் தமிழன் பார்த்திபன் இடம்பெற்றுள்ளார். அவரின் பின்னணி பற்றிக் காணலாம். 

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசில் முதலமைச்சர் விஜய் மற்றும் 8 ஆண், ஒரு பெண் என 9 அமைச்சர்கள் கடந்த மே 10ம் தேதி பதவியேற்றனர். இந்த நிலையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 23 புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் 21 தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களும், 2 காங்கிரஸ் அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில் விரைவில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என சொல்லப்படுகிறது. 

சேலம் விஜய் தமிழன் பார்த்திபன் யார்?

இந்த நிலையில் தவெக எம்.எல்.ஏ., விஜய் தமிழன் பார்த்திபனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சேலம் (தெற்கு) தொகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் தமிழன் பார்த்திபன் களம் கண்டார். 12ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் எலக்ட்ரானிக்ஸ் தொழில் செய்து வருகிறார். விஜயின் தீவிர ரசிகராக இருந்து அவரின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் மூலமாக தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி விஜயின் குட்புக்கில் விஜய் தமிழன் பார்த்திபன் இடம் பெற்றிருந்தார். 

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் இவர் வசித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் விஜய் தமிழன் பார்த்திபன் சேலம் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரை சேலம் தெற்கு தொகுதியில் வேட்பாளராக விஜய் நிறுத்தினார். தேர்தல் அறிவிப்பு முன்னர் ஒருமுறை விஜய் சேலம் சென்று பரப்புரை மேற்கொண்டார். இந்த தேர்தலில் திமுகவின் லோகநாதனை விட சுமார் 33,369 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தமிழன் பார்த்துபன் வெற்றி பெற்றார். 

அவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என சொல்லப்பட்ட நிலையில், அதன்படியே அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் விஜய் இவருக்கு தன்னுடைய கத்தி, ஜில்லா, கோட் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடிக்க சான்ஸ் கொடுத்திருந்தார். 3 படங்களிலும் விஜய் தமிழன் பார்த்திபன் போலீஸ் கேரக்டரில் தான் நடித்திருப்பார். அந்த அளவுக்கு விஜய் தமிழன் பார்த்திபன் மீது விஜய் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார். தற்போது தனது அமைச்சரவையிலும் இடம் கொடுத்து அன்பை வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

RRB Exam Free Coaching Class : ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி.! இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி.! இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
Embed widget