(Source: Poll of Polls)
Diwali Special Trains: தீபாவளி ஸ்பெஷல்: தென் மாவட்டங்களுக்கு 5 கூடுதல் சிறப்பு ரயில்கள்! உங்க ஊருக்கு டிக்கெட் இருக்கான்னு செக் பண்ணுங்க!
Diwali 2025 Special Trains List: தீபாவளி காலத்தைய கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் செங்கோட்டை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது

தீபாவளியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல மேலும் 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கும் என்று அறிவித்துள்ளது
தீபாவளி பண்டிகை:
தீபாவளி திருநாள் வரும் திங்களன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டு செல்வர், வழக்கமாக செல்லும் ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு அதன் டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
கூடுதல் சிறப்பு ரயில்கள்:
இந்த நிலையில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மேலும் 5 சிறப்பு ரயில்களை தெற்கு இயக்க உள்ளது.
தாம்பரம்–செங்கோட்டை சிறப்பு ரயில்:
தாம்பரத்தில் இருந்து நாளை (அக்டோபர் 17) இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து அக்டோபர் 20 (தீபாவளி நாள்) இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (06014) மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன — 1 ஏ.சி. இருக்கை பெட்டி, 11 இருக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியுள்ளது.
சென்னை–மதுரை சிறப்பு மெமு ரயில்கள்:
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு(ரயில் எண்: 06161) முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் நாளை (அக்டோபர் 17) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை அடையும். இந்த ரயிலானது மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக இந்த ரயில் இயக்கப்படும். ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது
- மதுரை–தாம்பரம் இடையே அக்டோபர் 18 மதியம் 12 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் அதே நாள் இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
- சென்னை எழும்பூர்–மதுரை இடையே அக்டோபர் 18 இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரையை அடையும்.
- மதுரை–தாம்பரம் இடையே அக்டோபர் 21 இரவு 8.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தீபாவளி காலத்தைய கூட்டநெரிசலை குறைத்து பயணிகள் வசதியை உறுதிசெய்யும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.






















