மேலும் அறிய

Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்

Diwali 2024 Special Bus: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 11 ஆயிரம் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை என்றால் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்வாசிகள் அதிகம் வசிக்கும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் போன்ற நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்:

குறிப்பாக, கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னையில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு இன்று சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 276 பேருந்துகளுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 900 பேருந்துகள் என 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  

எங்கிருந்து எந்த ஊர்களுக்கு?

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு:

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மாதவரம்:

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

அதேபோல, வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வரும் தீபாவளிக்கு 5 லட்சம் மக்கள் அளவிற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
"வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்பினால்.. விமானத்தில் செல்ல தடை" மத்திய அமைச்சர் தடாலடி
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
"வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்பினால்.. விமானத்தில் செல்ல தடை" மத்திய அமைச்சர் தடாலடி
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Irfan Controversy : மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
”திமுக ஆட்சி வரை ஆர்.என். ரவிதான் ஆளுநரா?” வி.கே.சிங் பெயர் அடிபடுவது எதனால்..?
”திமுக ஆட்சி வரை ஆர்.என். ரவிதான் ஆளுநரா?” வி.கே.சிங் பெயர் அடிபடுவது எதனால்..?
Embed widget