மேலும் அறிய

Diwali 2024 Holiday: தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை... அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் அரசு பொது விடுமுறை.

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30 ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 31-ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1-ஆம் தேதி ஏற்கெனவே அரசு விடுமுறை அளித்துள்ளது.

தீப ஒளித்திருநாள்

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்

தீபாவளியின் போது செலவிட வேண்டிய முதல் 5 இடங்கள்

2024 ஆம் ஆண்டு தீபாவளி விடுமுறையின் போது நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், பண்டிகையின் சிறந்ததை வெளிப்படுத்தும் பின்வரும் முதல் மூன்று இந்திய இடங்களைக் கவனியுங்கள்:

ஜே ஐபூர் - ஜெய்ப்பூர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விடுமுறையின் போது மிகவும் பிரபலமான இடமாகும். தீபாவளியின் உண்மையான அழகு வீடுகள், கடைகள் மற்றும் தெருக்களை அலங்கரிக்கும் விளக்குகள் மற்றும் விளக்குகளின் சூடான பிரகாசத்திலிருந்து உருவாகிறது. ஜெய்ப்பூர், பிங்க் சிட்டி, இதை அனுபவிக்க சிறந்த இடம். ஒவ்வொரு ஆண்டும், நகரின் தெருக்களை அலங்கரிக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கோவா -  கோவா, இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம், தீபாவளி கொண்டாட்டங்களுக்கும் பிரபலமானது. கொண்டாட்டங்களின் கவனம் நரகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதாக இருக்கும். ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும், அரக்கனின் மிகப்பெரிய உருவத்தை யார் செய்ய முடியும் என்பதைப் பார்க்க போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சூதாட்டம் ஒரு பிரபலமான தீபாவளி நடவடிக்கை என்பதால், நீங்கள் சூதாட்ட விடுதிகளில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம்.

வாரணாசி - வாரணாசி 2024 ஆம் ஆண்டிற்கான தீபாவளி விடுமுறையைக் கழிக்க ஒரு அழகான இந்திய இடமாகும். பண்டிகையின் உண்மையான அழகை அனுபவிக்க வாரணாசி நகரத்தில் உள்ள ஆற்றங்கரை உணவகங்களில் ஒன்றில் தங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிறப்பு கங்கா ஆரத்தி மற்றும் மண் விளக்குகள் ஆகியவை திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC GROUP 4: வரலாற்றில் முதல்முறை.. இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள் - டி.என்.பி.எஸ்.சி
TNPSC GROUP 4: வரலாற்றில் முதல்முறை.. இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள் - டி.என்.பி.எஸ்.சி
Vijay Padhaneer: பதநீருக்கு முக்கியத்துவம் தரும் தவெக விஜய் - பதநீர் பலன்கள் என்ன? உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
Vijay Padhaneer: பதநீருக்கு முக்கியத்துவம் தரும் தவெக விஜய் - பதநீர் பலன்கள் என்ன? உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
TVK Maanadu: ஹே! விஜய் பேச்சை ரசித்துக் கேட்ட மலேசிய அமைச்சர் - வீடியோவை பாருங்க
TVK Maanadu: ஹே! விஜய் பேச்சை ரசித்துக் கேட்ட மலேசிய அமைச்சர் - வீடியோவை பாருங்க
Breaking News LIVE 28th OCT 2024:
Breaking News LIVE 28th OCT 2024: "விஜய் கொள்கையும் எங்க கொள்கையும் ஒத்துப்போகல.. தவெகவுடன் கூட்டணி கிடையாது" - சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anjalai Ammal Profile : தென்னிந்தியாவின் ஜான்சிராணி தவெக போற்றும் சிங்கப்பெண் அஞ்சலை அம்மாள்?TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?Sellur Raju  | செல்லூர் ராஜூ-வின் கோரிக்கை அதிரடி காட்டிய PTR, KN.நேரு, ஒரே இரவில் நடந்த மாற்றம்Vijay Maanadu :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC GROUP 4: வரலாற்றில் முதல்முறை.. இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள் - டி.என்.பி.எஸ்.சி
TNPSC GROUP 4: வரலாற்றில் முதல்முறை.. இன்னும் 2 நாட்களில் வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள் - டி.என்.பி.எஸ்.சி
Vijay Padhaneer: பதநீருக்கு முக்கியத்துவம் தரும் தவெக விஜய் - பதநீர் பலன்கள் என்ன? உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
Vijay Padhaneer: பதநீருக்கு முக்கியத்துவம் தரும் தவெக விஜய் - பதநீர் பலன்கள் என்ன? உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
TVK Maanadu: ஹே! விஜய் பேச்சை ரசித்துக் கேட்ட மலேசிய அமைச்சர் - வீடியோவை பாருங்க
TVK Maanadu: ஹே! விஜய் பேச்சை ரசித்துக் கேட்ட மலேசிய அமைச்சர் - வீடியோவை பாருங்க
Breaking News LIVE 28th OCT 2024:
Breaking News LIVE 28th OCT 2024: "விஜய் கொள்கையும் எங்க கொள்கையும் ஒத்துப்போகல.. தவெகவுடன் கூட்டணி கிடையாது" - சீமான்
Diwali Special Bus: கிளம்புங்க! இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இத்தனை பேருந்துகளா?
Diwali Special Bus: கிளம்புங்க! இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இத்தனை பேருந்துகளா?
TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
Vijay Tvk:
Vijay Tvk: "அவர்களே இவர்களே” சொல்லல, நிர்வாகிகள் பேர மறந்துட்டாரா? தவெக தலைவர் விஜய் மீது தொடங்கிய அட்டாக்..!
Rohit Kohli: தொடர் தோல்வி.. பறிக்கப்பட்ட ரோகித், கோலியின் சலுகைகள் - கவுதம் கம்பீர் அதிரடி நடவடிக்கை
Rohit Kohli: தொடர் தோல்வி.. பறிக்கப்பட்ட ரோகித், கோலியின் சலுகைகள் - கவுதம் கம்பீர் அதிரடி நடவடிக்கை
Embed widget