மேலும் அறிய
Advertisement
எந்த ஒரு கடன் மனுக்களையும் நிராகரிக்க கூடாது - வங்கியாளர்களுக்கு கரூர் ஆட்சியர் அறிவுரை
வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது அவற்றினை பரிசலித்து அவர்களுக்கு கடனுதவிகளை வழங்கிட வேண்டும்.
கரூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.66.43 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் வழங்கப்படும். மானிய கடன் திட்டங்கள் குறித்தும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும், பயனாளிகள் அளிக்கின்ற விண்ணப்பங்களை நிராகரிக்காமல் அவர்களுக்கு விரைவாக முடித்து தருவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கப்படுகின்ற மனுக்கள் மீது உடனடியாக வங்கி கடன் வழங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்கி கடனுதவிகளை தருவதற்கு முன் வர வேண்டும். தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை தவிர்த்து விடாமல் கடன் உதவி வழங்க வேண்டும். மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படும் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் வரும் விண்ணப்பங்களை விரைந்து முடித்து பயனாளிகள் பயன் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது அவற்றினை பரிசலித்து அவர்களுக்கு கடனுதவிகளை வழங்கிடவும், கலைஞரின் அனைத்து கிராம ஓரங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் விவசாயிகளுக்கு மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கியுள்ளீர்கள். மேலும் கால்நடை வாங்குவதற்கு அதிகமாக கடனதவி கொடுக்க முன் வர வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு நிறுவனத்தில் திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
ஆவின் கூட்டுறவு சங்கத்தின் இணைப்புடன் பௌத்திரம் கிளை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.45.36 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நச்சலூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு விரிவாக்க நிதியாக ரூ.12 இலட்சமும், இணை மானிய திட்ட நிதியிலிருந்து வேட்ட மங்கலம் ஊராட்சியை சேர்ந்த வினோதினி என்ற பயனாளிக்கு பாக்கு மரத்தட்டு தயாரிப்பு இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.907,162 -க்கான கசோலையும் ஆக மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.66,43,162 மதிப்பில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
நமக்கு நாமே திட்டத்தில் காவல்காரன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்காக ரூ.10 இலட்சத்திற்கான வங்கி கசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சீனிவாசன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் தமருபாணி, முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், ரிசர்வ் வங்கி இந்தியா மாவட்ட மேலாளர்விஜய் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion