கரூர் மாவட்டத்தில் நம்ம ஊர் சூப்பர் திட்டம் - ஆட்சியர் பெருமிதம்
முதலமைச்சர் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் மகளிர் உரிமை தொகையின் வழங்கும் அற்புதமான திட்டத்தை அறிவித்து உள்ளார்கள். தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள் தமிழர்கள்
மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள்.
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டாள் கோவில் மேற்கு ஊராட்சி உட்பட்ட வேப்பம்பாளையம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கூட்டத்தில் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.மு.பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் மகளிர் உரிமை தொகையின் வழங்கும் அற்புதமான திட்டத்தை அறிவித்து உள்ளார்கள். நம்ம ஊர் சூப்பர் திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை நமது ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெயர் வைத்ததற்கு தகுந்தார் போல் நாம் அனைவரும் நமது ஊரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள் தமிழர்கள் தான் உழைப்புக்கு பெயர் பெற்று உள்ளவர்கள். பல்வேறு நாடுகளில் காடுகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழர்கள் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சிறப்பான நாகரிகத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன. நமது ஊரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் அன்றாட சேர்க்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. தமிழர்களுக்கு இயல்பாகவே நமது பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட சுகாதார உறுதி மொழியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நம்மளும் சரி நமது அடுத்த தலைமுறைக்கும் சரி குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கான அடிப்படையை சொல்லித் தர வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் நம்ம ஊரு சூப்பர் என்பதை அனைவரும் செயல்படுத்த முன் வரவேண்டும். நமது உடம்பில் இருந்து வரும் கழிவுகளும் சரி வீடுகளில் இருந்து உருவாகும் கழிவுகளளும் சரி அதை முறைப்படி சுத்தம் செய்தால் நம்ம ஊர் சூப்பர் ஆகிவிடும். அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு அனைத்து மகளிரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு நல்ல சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறார்கள் அதனால் அனைத்து மகளிர்களும் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக சேர வேண்டும் அவர்களுக்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நம்மளுடைய குழந்தைகள் அனைவரும் கல்வி பெறுவது மட்டுமல்லாமல் உயர் கல்வி படிப்பதற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. தற்போது வெப்ப அலை அதிகமாக உள்ளதால் முடிந்த அளவிற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு தண்ணீர் சத்து அதிகம் உள்ள உணவுகளை வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மண் பானையின் மூலம் நுகர்வோர்களுக்கு குடிநீர் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் சக்தி மிகப்பெரிய சக்தியாகும் அதனால் தான் இது போன்ற கிராம சபைகளை அதிக அளவில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த ஊராட்சியை சிறப்பாக நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஊராட்சி சேர்ந்த பொதுமக்களுக்கு எனது மே தின தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பின்னர் கிராம சபையை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சார்பாக பொதுமக்கள் அரசின் திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சி இணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கையின் வகையில் ஏழு மாணவ மாணவியர்களுக்கு மலர் மாலை அணிவித்து சேர்க்கையை தொடங்கி வைத்து அவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ம.கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணி ஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் திரு .சீனிவாசன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மரு. சந்தோஷ் குமார் வேளாண் இணை இயக்குனர் திரு. சிவசுப்பிரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அன்புமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வினோத், திருமதி.கிருஸ்டி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.