மேலும் அறிய

Pa. Ranjith: உங்க கையில் இருந்தது; ஆனாலும் செய்யல? வாக்குக்கு மட்டும் சமூகநீதியா?: திமுக அரசை நேரடியாக விளாசிய பா.ரஞ்சித்

Pa. Ranjith On Armstrong: ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித், தமிழக அரசிசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Pa. Ranjith On Armstrong: ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, சிலர் சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் சாடியுள்ளார்.

பா. ரஞ்சித் சமூக வலைதள பதிவு:

பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

பா. ரஞ்சித் எழுப்பும் கேள்விகள்:

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது? தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?” என இயக்குனர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget