பிரபல இயக்குநர் தாமிரா கொரோனாவால் காலமானார் - சோகத்தில் திரையுலகம்
பிரபல இயக்குநர் தாமிரா என்கிற காதர் முகைதீன் கொரோனாவிற்காக சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
ரெட்டச்சுழி மற்றும் ஆண் தேவதை படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் தாமிரா என்கிற காதர் முகைதீன் கொரோனாவிற்காக சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 52, திருநெல்வேலியை சேர்ந்த இவர் சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். தனது முதல் படத்திலேயே மூத்த இயக்குநர்களாகிய இயக்குனர் சிகரம் பாலசந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஒன்றாக இயக்கிய பெருமை தாமிராவை சேரும்.
பெரிய முயற்சிகளில் முனைப்புடன் இருந்தார். பல கதைகள். பல கனவுகள். இழந்துவிட்டோம் என்று நம்ப முடியாத செய்தி இயக்குநர் தாமிராவின் மறைவுச் செய்தி. அவர்தம் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— sureshkamatchi (@sureshkamatchi) April 27, 2021
என்ன சொல்ல? இந்த இடரைக் கடக்க பெருமுயற்சி செய்வோம். pic.twitter.com/szuGrupXF0
என்னது! தாமிரா போயிட்டாரா?? நோ நோ நம்பமுடியவில்லை. நம்பமாட்டேன் https://t.co/4MKGJBFZzS
— Kasturi Shankar (@KasthuriShankar) April 27, 2021
அந்த படத்தை தொடர்ந்து 2018ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்தையும் தாமிரா தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு படப்பிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆண் தேவதை படம் போதுமான பொருள் இல்லாத காரணத்தால் தொடர்ந்து தடைப்பட்டது. அதன் பிறகு பல நண்பர்களின் உதவியால் படம் மீண்டும் தொடங்கப்பட்டு இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
Rip pic.twitter.com/oq2eKVFqvT
— Manobala (@manobalam) April 27, 2021
தாமிரா சார் 💔 #Rip pic.twitter.com/mhpm2W8jYB
— 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭 𝐉𝐞𝐲𝐚𝐤𝐨𝐝𝐢 (@jeranjit) April 27, 2021
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 52. திரைபிரபலன்கள் பலரும் அவருடன் பணியாற்றிய நண்பர்களும் தங்களுடைய இறங்கல்களையோ தெரிவித்து வருகின்றனர்.