(Source: ECI/ABP News/ABP Majha)
AIADMK Treasurer: இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி: முதல் கையெழுத்து இதுதான்!
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/w5b1edU0gT
— AIADMK (@AIADMKOfficial) July 11, 2022
அந்த அறிவிப்பில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பொறுப்பில் திண்டுக்கல் சீனிவாசன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் அதன் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அதிமுகவின் பொதுச்செயலளாராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஓபிஎஸ் சிடம் கேட்ட போது, ஈபிஎஸ் -சை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
View this post on Instagram
தொடர்ந்து 145 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தி நடந்த வன்முறை தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் பொதுசொத்துக்களை சேதப்படுத்துதல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்