மேலும் அறிய
பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
’’ஆண்டுதோறும், 5 டன் கலர் பொடி மட்டுமே உற்பத்தி செய்யப்படும், ஆனால் பெண்கள் மத்தியில் கலர் பொடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இந்தாண்டு கலர் பொடி உற்பத்தி கூடுதலாக தயாரித்து வருகின்றனர்’’
![பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம் Dharmapuri: The work of making colored powders for the Pongal festival is in full swing பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/c6958ba590ccd6d69d6f1e9314e4bbac_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணி
மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ண கோலமிட்டு கடவுளை வழிபாடுபவர். இதனை தொடர்ந்து தை மாதத்தில் வரும் தமிழகர்களின் பாரம்பரிய திருவிழாவான தைப்பொங்கல் நாளன்று அதிகாலையில் பெண்கள்,பல வண்ண கோலமிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையயொட்டி அனைவருடைய மனதையும் சுண்டி இழுக்கும் வகையில் தருமபுரியில், வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
![பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/17d19227266e0ab6136a067ea7d6c60c_original.jpg)
தருமபுரி, ஏ.கொல்லஅள்ளி, பழையதர்மபுரி, குண்டல்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரவை ஆலைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் உள்ளிட்ட 10 வகையான நிறங்களில் கோலப்பொடிகள் மரவள்ளி கிழங்கு மாவு மூலம் தயாரிக்கபடுகிறது.தருமபுரியில் தயாரிக்கப்படும் கலர்கோலப்பொடி உள்ளூர் மற்றும் பெங்களூர், சேலம், சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. ஆண்டுதோறும், 5 டன் கலர் பொடி மட்டுமே உற்பத்தி செய்யப்படும், ஆனால் பெண்கள் மத்தியில் கலர் பொடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இந்தாண்டு கலர் பொடி உற்பத்தி கூடுதலாக தயாரித்து வருகின்றனர்.
![பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/4f0ab44f2f7a8d8ea08dafdd43b91630_original.jpg)
ஒரு கிலோ கலர் பொடி 30 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்கழி மாதம் துவங்கி உள்ளதால் கலர் பொடிகள் பேக் செய்து அதனை விற்பனைக்கு அனுப்பும் பணி துவங்கி உள்ளது. மேலும் பொங்கல் திருவிழா நெருங்கி வருவதால் கலர் கோலப்பொடிகள் தயாரித்து அதை உலர வைக்கும் பணியில் இரவு பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கியும் சில நாட்களில் மழை பொழிவு இருந்ததால், பனி வரவில்லை. தொடர்ந்து மழை நின்றதால் பனி பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், தீர்த்தமலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பெத்தூர், கொளகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.
![பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/dbbbc6a0e432c3146472f6a6f5a5a33d_original.jpg)
அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். நேற்று முழுவதும் வெயில் அடித்த நிலையிலும், லேசான பனி பொழிவும், குளிரும் பரவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion