மேலும் அறிய

Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு  கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது.

தருமபுரி:  மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை என  மாவட்ட ஆட்சியர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

தருமபு மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு  கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி?. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.? 
 
தருமபுரி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்களின் கோரிக்கையின் காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறம் திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டு இக்குடோனுக்கு தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில்வே நிலையத்திற்கு நெல் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனில் இருப்பு வைக்கப்படுகிறது.  இந்நிலையில் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில் பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர் பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை எடுத்து விஜயலன்ஸ் பிரிவினர் தருமபுரி திறந்தவெளி நெல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் 7000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கேட்டபோது திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல்  மூட்டைகள் வந்துள்ளது.  போதிய பணியாளர்கள் இல்லாததால் லோடுமேன்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியவில்லை நெல் மூட்டைகள் குறைய  வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல்படியே 7000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மீதமுள்ள 15 டன் நெல் மூட்டைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு  கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாகவும், 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாகவும், பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்  சாந்தி நெல் சேமிப்பு கிடங்கினை அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்,. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஆட்சியர் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை என்றார்.
 
Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்

மேலும், சேமிப்பு கிடங்கில் மூட்டைகள் சரிந்திருக்கிறது அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவாதகவும், 7 ஆயிரம் டன் நெல் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயாகவில்லை எனவும், அதிகாரிகள் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், நூறு சதவீத முழுமையான விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “டெல்டா மாவட்டங்களிலிருந்து  11 வேகன்கள் மூலம் 22 ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது. அதில் 7 ஆயிரத்து 174 மெட்ரிக் டன் அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்ப பட்டிருக்கிறது.  மீதம் 15 ஆயிரத்து 98 மெட்ரிக் டன் இருப்பு உள்ளதாகவும், இருப்பு முழுவதும் அரவைக்கு அனுப்பிய பிறகு ஆய்வுக்குட்படுத்துபட்ட பிறகு முழுமையான விபரங்கள் தெரியவரும்” என்றார்.

Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்

அதனைத் தொடர்ந்து தற்பொழுது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
Embed widget