மேலும் அறிய

Anbumani: 'ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு பிரச்சினை.. அனைவருக்குமே என்.எல்.சி.யால் சிக்கல்' - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் உழவர் பேரியக்கம் சார்பில் நெய்வேலியில் நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, "15, 20 வருடங்களுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் கொள்கையாகவும் இருந்தது. அப்பொழுது எங்களுக்கு புரியவில்லை, இப்பொழுது தான் எங்களுக்கு புரிய வந்திருக்கிறது. அன்றைக்கு எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நிலம் கொடுத்து விட்டார்கள், அவர்களுக்கு நல்ல வேலை கொடுக்க வேண்டும் என்பது தான்.

ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சம் என்றார்கள் நாங்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் கொடுக்க வைத்தோம். அன்று நான் அமைச்சராகவும் இருந்தேன், அன்று எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வரும் என்று தெரியவில்லை, இன்று எனக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் இன்றைக்கு, நாளை என்ன பிரச்சனை வரும் என்பது பலருக்கு புரியவில்லை, சில பேர் புரிந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள், சில பேர் புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அனைத்து சங்கங்களையும் அழைத்திருக்கிறோம். இவங்க யாருமே எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று ஒதுங்க முடியாது. அனைவருக்கும் என்.எல்.சி நிறுவனத்தால் பிரச்சனை இருக்கிறது. 

சட்டமன்றத்தில் தொழிற்துறை அமைச்சர் ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 23 லட்சம் தருவதாக சொன்னதை, 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 1800 பேருக்கு வேலை தருவதாக அவர் சொல்லவில்லை, 1800 பேருக்கு வேலை இருக்கிறது, அதற்கு போட்டி போட வேண்டும், அப்படி என்ன வேலை என்றால்? தின கூலி வேலை தான் அந்த வேலை. என் முன்னோர்கள் வாழ்ந்த மண். இதை விட்டுவிட்டு நான் எங்கே செல்ல வேண்டும்? 

15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதே கோரிக்கை தான் வைத்தேன். இன்று எனக்கு தெரிகிறது. 91 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எடுக்கப் போகிறார்கள் 91 ஆயிரம் ஏக்கர் என்றால் நெய்வேலியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை வரை உள்ள இடம் அழிய போகிறது.

25 லட்சம் நிலத்திற்கு பணம் கொடுக்கிறோம், 1800 வேலை கொடுக்குறோம் என்கிறார்கள். நிலம் வைத்திருப்பவர்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஐந்து சதவீதம் மக்கள் மட்டுமே நிலம் வைத்திருக்கிறார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? 

என்எல்சி ஒன்று மற்றும் இரண்டு சுரங்க விரிவாக்கத்திற்காக 13,000 ஏக்கர் நிலங்கள் விரைவில் எடுக்கப்பட இருக்கிறது. புதியதாக மூன்றாவது சுரங்கத்திற்கு 12000 ஏக்கர், மொத்தம் 25000 ஏக்கரை கைப்பற்ற இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஒன்று பேசிக்கொண்டும், வெளியில் ஒன்று செய்து கொண்டும் இருப்பது சரியில்லை.

நெய்வேலி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்கிறார்கள். யாரை ஏமாற்ற சொல்கிறார்கள்? தமிழ்நாட்டின் அன்றாடம் தேவை 18 ஆயிரம் மெகாவாட், என் எல் சி நிறுவனம் கொடுப்பது 800 லிருந்து ஆயிரம் மெகாவாட் மட்டுமே.

 காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள், ராணுவத்தை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள், எங்களை எதுவும் பண்ண செய்ய முடியாது. நாங்கள் தற்போது அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியும் எங்களுக்கு போக தெரியும். உங்களுடைய உணர்வு தெரிகிறது, பிரச்சனை உங்களுக்கு புரிகிறது. இது விவசாயிகள் பிரச்சனை அல்ல. நம் மண் சார்ந்த பிரச்சனை. நம் எல்லோருடைய பிரச்சினை என்பது உங்களுக்கு புரிகிறது. வாழ்வாதாரப் பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிகிறது.

பழுப்பு நிலக்கரியை எரிப்பதன் மூலம் சல்பர் டைஆக்சைடு, கார்பன் டைஆக்சைடுபோன்ற மோசமான வாயுக்கள் தான் வெளிவரும். இதன் மூலம் ஆஸ்துமா கேன்சர் போன்ற நோய்கள் தான் அதிகமாகும். பழுப்பு நிலக்கரி என்பது தரம் குறைந்த நிலக்கரி. மக்கள் துணிச்சலாக இருக்கிறார்கள். காவல்துறைக்கு எல்லாம் அவர்கள் பயப்பட மாட்டார்கள். இது  வருங்கால பிரச்சனை, அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்க வேண்டும்.

என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் காலநிலை அகதிகள் தான். ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் என்று போராடி மூட வைத்தோம், அதனைவிட 100 மடங்கு மோசமான பிரச்சனை என் எல் சி யால்  நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆதரவு மட்டுமல்ல, பங்களிப்பும் வேண்டும். நீங்கள் அனைவரும் வரவேண்டும்" 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget