மேலும் அறிய

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் நேரில் ஆறுதல்

தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் அருண்ஹெல்டர் இறந்து போன தொழிலாளர்களின்  வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கியதை பாராட்டினார்கள்.

தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் அருண்ஹெல்டர் இறந்து போன தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி மாவட்ட நிர்வாகத்தால் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளபட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை பாராட்டினார்.கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் நேரில் ஆறுதல்

கரூர் மாவட்டம், சுக்காலியூர் காந்தி நகர் பகுதியில் தனி நபர் வீடு கட்டுமானப் பணியின்போது நீர்நிலை தொட்டியில் கான்கீரிட் பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மூச்சு தினறல் ஏற்பட்டு உயிர் இழந்த வீட்டை இன்று (18.11.2022)  தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் அருண்ஹெல்டர் , மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர், த.பிரபுசங்கர், திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையில்,  தேசிய ஆணையத்தின் துணை தலைவரின் தனி செயலாளர் அன்மோல், தேசிய ஆணையத்தின் இயக்குநரின் நேர்முக உதவியாளர் தராமபிரபு, ஆணையத்தின் மூத்த புலனாய்வாளர் லிஸ்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம்.இ.கா.ப.  முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் நேரில் ஆறுதல்

சுக்காலியூர் தோரணக்கால்பட்டியை சேர்ந்த தொழிலாளர் ராஜேஷ் குமார், சின்னமலைப்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் கோபால், சிவக்குமார், மற்றும் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தொழிலாளர் மோகன்ராஜ்  ஆகிய நான்கு இறந்து போன நபர்களின்  வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கி நிவாரண நிதி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, வீடு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நிவாரண உதவியினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டதை கேட்டறிந்து, இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு உடைகளை வழங்கினார். மேலும், இறந்து போனவர்களின் கிடைக்க வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் திரு,அருண்ஹெல்டர்  தெரிவித்தார்.  

பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் தெரிவித்ததாவது:

மத்திய அமைச்சர் இக்குழுவிற்கு தலைவராக உள்ளார். நான் பட்டியல் இன  உறுப்பினருக்கு துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். இதற்குக் கீழ் இரண்டு பதவிகள் உள்ளது. இப்பதவிகளில் மூன்று ஆண்டுகளுக்கு பணி புரிய மத்திய அரசு அமைத்துள்ளது. இப்பதவியில் ஒரு அமைச்சர் தகுதிக்குரிய அதிகாரம் படைக்கக்கூடிய பொறுப்பு வைத்து வருகிறார்கள். நீதித்துறை மூலம் இந்த சம்பவம் நடந்ததற்கு தேவையான அதிகாரம் இக்குழுவிற்கு உண்டு. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ததற்காக துணைத் தலைவர் பதவியை செய்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட உறுப்பினருக்கு குழுவின் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பல்வேறு இழப்புகளுக்கு உதவிடும் வகையில் செய்து வருகிறோம். இதற்கு முன்பு சென்னையில் இது மாதிரியான சம்பவம் நடைபெற்றது.

துணைத் தலைவர் அவர்களுக்கு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சென்று தலா ஒரு குடும்பத்திற்கு 15 லட்சம் அதுமட்டுமில்லாமல் 5 இலட்சம் என மொத்த 20 இலட்சத்திற்கான உதவிகளை செய்து கொடுக்கப்பட்டது.  மேலும் குடும்பத்தார்களுக்கு அரசு வேலை வழங்கியும் இது போன்ற சம்பவம் நடைபெற்றது.  தகவல் கிடைத்த உடனே நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று இது போன்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து வருகிறோம்.  மேலும், தொழிலாளர்கள் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தவர்கள் குடும்பத்தார்களுக்கு நேரில் சென்று வழக்குப்பதிவு முன்னதாகவே ரூ.6 லட்சமும் வழக்கு முடிந்தவுடன் 6 லட்சமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் .

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் நேரில் ஆறுதல்

இவை அம்பேத்கர் உடைய வலிமையை நிகழ்த்தி காட்டி வருகிறது அரசியலமைப்பு சட்டம் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் படி அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டபடி செய்து வருகிறோம். அங்கீகாரம் வாங்காமல் கட்டுமானம் கட்டுவதும் தவறான ஒன்று அதேபோல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பது கடமையாக இருக்க வேண்டும். இதில் மாநகராட்சி அதிகாரி அவர்களை தவறு செய்ததற்காக அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க  இதுகுறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத கட்டுமான பணிக்கு ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியும் தேவையான விழிப்புணர்வு அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இது போன்ற மரணங்கள் வரும் காலங்களில் நடக்கக்கூடாது என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் புஷ்பாதேவி(குளித்தலை), ரூபினா(கரூர்), தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) . சைபுதீன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தாஜுதீன், , வட்டாட்சியர்கள் சிவக்குமார், மோகன்ராஜ், , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
Sriram Krishnan : ”ட்ரம்புக்கே ஆலோசகரான சென்னைக்காரர்” யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..!
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
Embed widget