கரூரில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் வெங்கடேஷ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
தமிழக ஆளுநரை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தபால் அலுவலகம் முன்பு, கரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தின் மாண்பை கருத்தில் கொண்டு, தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் மற்றும் ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் வெங்கடேஷ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி விரிவாக்க இடங்கள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்.
கருர் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், தனியார்ஆக்கிரமிப்புகளால் விரிவாக்க பணிகள் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் காலியிடங்களை மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் போது, குறிப்பிட்ட சதுர அடியை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல், மின்சார ட்ரான்ஸ்பார்மர் அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பல உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட ரிசர்வ் சைட் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டாலும், பலத்த கவனிப்புக்காக அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை, தமிழக முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன கரூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக இணைக்கப்பட்ட தாந்தோணி, இனாம் கரூர் நகராட்சிகள் மற்றும் சனப்பிரட்டி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பஸ்பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில், மற்றும் கொசுவலை உற்பத்தி தொழில்கள் விரிவாக்கத்துக்காகவும், வெளி மாவட்டங்களில் இருந்து குடியேறிய தொழிலாளர்கள் வசதிகளுக்காகவும், அதிக அளவில் விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டு தொழில் நிறுவனங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன அப்போது கருர் மாநகராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட அதிகரித்து உள்ளன.
கரூர் மாநகராட்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளான இனாம் கரூர் தாந்தோணி மலை சனப்பிரட்டியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக செய்ய வேண்டியுள்ளது. எனவே கருர் மாநகர வளர்ச்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் மாநகராட்சி இடங்களை ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.