மார்கழி மாத ராசி பலன் 2025 - 2026 மீனம் ராசி
உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி பெருகும்....

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் அதிபதியான சூரிய பகவான் பத்தாம் வீடான தொழில ஸ்தானத்தில் அமருகிறார் போட்டியே இல்லாத வெற்றி உங்களைத் தேடி வரும்.... உங்களுக்குப் பின்பாக யார் என்ன பேசினாலும் அதை பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய காலகட்டம்... தொழிலில் சில அழுத்தங்கள் ஏற்படும்.... டார்கெட் வைத்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் ஆனால் அவை உங்களை பெரிதாக பாதிக்காது...
கொடுக்கின்ற வேலையை கொடுக்கின்ற நேரத்திலேயே முடித்து விடுங்கள்... இன்னும் சொல்லப் போனால் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்டது என்றால் அதற்கு முன்பாகவே நீங்கள் முடித்து வைப்பது நல்லது.... குரு பகவானின் நான்காம் இடத்து சஞ்சாரம் திடீரென்று பயணங்களால் திக்கு முக்காட வைப்பார்... ஒரு இடத்தில் உங்களால் அமர முடியாது ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்... ராகு பகவானின் பன்னிரெண்டாம் இடத்து சஞ்சாரம் எவ்வளவு செலவாகிறது என்பதை குறித்தான கணக்கை வைத்துக் கொள்ளுங்கள்...
வரும் பணம் குறித்தான விழிப்புணர்வு உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் எவ்வளவு செலவாகிறது என்பது குறித்தும் நீங்கள் சிந்தித்து வைப்பது நல்லது.... வரவு செலவு கணக்குகளை எப்பொழுதும் சரிபார்த்து வையுங்கள்.... கட்டுக்கடங்காமல் செலவுகள் உங்களுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் அப்படி வாங்கும் கடனால் எதிர்காலத்தில் சிக்கல் உருவாகலாம் ஜாக்கிரதையாக இருங்கள்...
புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள் நிச்சயமாக உங்களுக்கு பலன் உண்டு... சூரியபகவானின் மூல நட்சத்திர சஞ்சாரம் உங்களுடைய எதிரிகள் இல்லாமல் போகும் அளவிற்கு நிம்மதியான ஒரு வேலை இடத்தை உருவாக்கும்... சூரிய பகவானின் பூராட நட்சத்திர சஞ்சாரம் முயற்சிகள் மூலமாக வெற்றி கிடைக்கும்.... வம்பு வழக்குகளில் நீண்ட நாட்களாக நீங்கள் சிக்கி இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான காலகட்டமாகவும் இது அமையவிருக்கிறது... சூரிய பகவானின் உத்திராட நட்சத்திர சஞ்சாரம் எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் பிறக்கும்.. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்...
அரசு வேலைக்காக காத்திருக்கும் மீன ராசி அன்பர்களே இதோ போட்டித் தேர்வுகள் மூலம் வெற்றி அதன் மூலம் நல்ல வேலை வாய்ப்புகள் உங்களை நெருங்கி வரும்... உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் உள்ள தசா மற்றும் புத்தியின் அடிப்படையில்தான் உங்களுடைய வாழ்க்கை நகரும் என்பது உண்மை.. கோச்சாரத்தில் தற்போது சூரிய பகவான் அமர்ந்திருக்கும் காலகட்டத்தில் உங்களுடைய ஜாதகத்திலும் வெற்றி கோச்சாரத்திலும் வெற்றி என்ற அடிப்படையில் வெற்றி உங்களைத் தேடி வரும்...
உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி பெருகும்....
உங்களுடைய ராசிக்கு செவ்வாய் பகவான் 11ஆம் வீட்டில் ஜனவரி மாதத்தில் பாதியிலிருந்து சஞ்சாரம் செய்யப் போகிறார்.... இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் பகவான் 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதன் மூலம் நீங்கள் பன்மடங்கு சம்பாத்தியத்தை உயர்த்துவீர்கள்... அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும்.... உங்களுடைய வேலைத்தளத்தில் இன்கிரிமென்ட் போன்றவை கிடைத்து உங்களுடைய வருமானம் உயரப் போகிறது.... நீங்கள் மனதார ஆசைப்பட்டவைகள் எல்லாம் தற்பொழுது மார்கழி மாதத்தில் நடந்தேறுவதற்கான சிறப்பான காலகட்டமாக இருப்பதால் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.... வாழ்த்துக்கள் வணக்கம்.... நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை வழிபடுங்கள் வாழ்க்கை சிறப்பாகும்.....





















