மேலும் அறிய

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம்: அன்புமணி இராமதாஸ் தயார்

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைத் தருவதாகவும், விவாதத்திற்கு வருவதாகவ்ம் அமைச்சர் முத்துசாமி  கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  

தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றமா? அமைச்சர் முத்துசாமியின் அழைப்பை ஏற்று அவருடன் விவாதம் நடத்தத் தயார் பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

விவாதம் நடத்த நான் தயார் - அன்புமணி சவால்

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும்,  அவை குறித்த பட்டியலை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு வழங்குவதுடன், அவருடன் விவாதம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கூறியிருக்கிறார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்; விவாதத்திற்கான அவரது அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

அமைச்சர் முத்துசாமி அவர்கள் மட்டுமல்ல....  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  சிவசங்கர், கோவி செழியன்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  திமுகவினர் அனைவரும் கூறுவது பொய்கள் தான் என்பதை ஒரு புள்ளி விவரத்தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர் 95%, 98%, 99%  என்றெல்லாம் அவர் கூறினார். இது குறித்த உண்மை நிலையை விளக்க வேண்டும் என்பதற்காகத் தான் விடியல் எங்கே? என்ற தலைப்பில் ஆவணம் ஒன்றை நான் தயாரித்து வெளியிட்டேன். அதில் 66  வாக்குறுதிகள், அதாவது 13% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதன்பின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர்  சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி செய்தியாளர்களை சந்திக்கும் போது, திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர். அதன்படி  பார்த்தால் 72%  வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதன் பின் எந்த வாக்குறுதியில் நிறைவேற்றப்படாத நிலையில், இப்போது 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும்? திமுக அரசின் முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் வாயில் வந்ததை கூறி விட்டு செல்கிறார்களே தவிர தரவுகளைத் தருவதில்லை.

நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன?  அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால்   எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.  இது குறித்து அமைச்சரோ, முதல்வரோ விவாதத்திற்கு வாருங்கள் என்றும் அறைகூவல் விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை அதற்கு  பதில் கிடைக்கவில்லை.

இப்போது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைத் தருவதாகவும், விவாதத்திற்கு வருவதாகவ்ம் அமைச்சர் முத்துசாமி  கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  அவரை அழைப்பை  நான் ஏற்கிறேன். அவர் மூலமாகவே திமுக அரசின் மோசடிகள்  வெளிவரட்டும்.  எப்போது, எங்கு விவாதம் என்பதையும் அமைச்சர் முத்துசாமி அவர்களே அறிவிக்கட்டும்.  அவரை விவாத மேடையில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget