மேலும் அறிய

Sitrang Cyclone : உருவானது சிட்ராங் புயல் : தமிழகத்திற்கு பாதிப்பா..? எங்கெல்லாம் மழை பெய்யும்..?

சிட்ராங் புயல் 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து மையம் கொண்டு, வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்.

சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்திய கிழக்கு  வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது.

பின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் "SITRANG" புயல் 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து இன்று அக்டோபர் 24 ஆம் தேதி 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 25 அதிகாலையில் வங்காள தேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

25.10.2022 முதல் 27.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24.10.2022: மத்தியமேற்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.10.2022:, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள- வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநில அரசு அதன் 7 கடலோர மாவட்டங்களை உஷார்படுத்தியுள்ளது. கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், குர்தா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையங்கள் முன்னெச்சரிக்கை கொடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget