Cyclone Mandous: புயல் எங்கு உள்ளது?, எப்பொழுது கரையை கடக்கும்?, எங்கு ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்,? எங்கு விடுமுறை உள்ளிட்ட தகவல்கள்...
தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
நேற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது புயலாக நள்ளிரவு வலுப்பெற்றது. இப்புயலுக்கு சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த பெயரான மாண்டஸ் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று( டிச.08 ) மாலை 5.30 மணியளவில் ”மாண்டஸ்” புயலானது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் இருப்பிடம், அதன் நகரும் வேகம், அதனால் கன மழை பெறும் மாவட்டங்கள், முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்.
புயல் எங்கு உள்ளது?
வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாணடஸ் புயலானது, சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது, 13 கி.மீ வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய இரவு ( டிச.8 ) 8.30 மணி நிலவரப்படி புயலானது, சென்னயிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 440 கி.மீ தொலைவில் உள்ளது எனவும் காரைக்காலில் இருந்து கிழக்கு மற்றும் தென் கிழக்கே சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எப்பொழுது கரையை கடக்கும்?
சுமார் 12 வேகத்தில் , தமிழ்நாட்டை நோக்கி நக்ர்ந்து வரும் மாண்டஸ் புயலானது, நாளை இரவு ( 7 மணிக்கு மேலாக ), கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்துக்கு அருகே நாளை ( டிச.09) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அலர்ட்:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதால் நாளை டிச.09ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ,திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உதவி/புகார் எண்கள்:
சென்னையில் நாளை கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர உதவி எண்- 1913
மேலும் உதவி எண்கள்:
1. 044- 25619206
2. 044- 25619207
3. 044- 25619208
09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.