மேலும் அறிய

Cyber Crime: மக்களே உஷார்..! புதுப்புது யுக்தியுடன் உலா வரும் சைபர் திருடர்கள்.. தப்பிப்பது எப்படி?

புதிய சைபர் குற்றற்ஙகளிலிருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.

இதுபோன்று தினமும் புதுப்புது யுக்தியுடன் வலைவிரிக்கும் 'சைபர்' திருடர்களிடம் சிக்காமல் இருக்க, விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஓ.டி.பி எண் மூலம் மோசடி

தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர். அந்தவகையில் பல விதமான ஆன்லைன் மோசடிகள் பல அரங்கேறி வருகிறது. அதன்படி,  ஸ்மார்ட் போன் படுத்துவோரின், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு 'லிங்க்' ஒன்று வருகிறது. அதில், 'உங்களுக்கு வங்கி, வீட்டு கடன் கேட்டு தேவையற்ற அழைப்புகள் வருகிறதா, அதுபற்றி புகார் தெரிவிக்க, இந்த 'லிங்க்'கை 'கிளிக்' செய்யுங்கள்' குறிப்பிடப்பட்டு உள்ளது. 

நாமும், தொல்லை ஒழிந்தால் போதும் என நினைத்து, அந்த லிங்க்கை கிளிக் செய்தால், கஸ்டமர் சர்வீஸ் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டதும் உங்கள் மொபைல் எண்ணுக்கு  ஓ.டி.பி எண் வருகிறதது. எதிர்முனையில் இருப்பவர்களின் பேச்சை நம்பி ஓ.டி.பி எண்ணை தெரிவித்தால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது.

இதுமட்டுமின்றி, எதிர்முனையில் பேசுபவரை நம்பி, மற்றொரு மொபைல் போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் பணம் திருடப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

மின் கட்டணம் மூலம் மோசடி

மேலும், மின் கட்டணம் மூலம் மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி, நீங்கள் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணம் இணையத்தில் அப்டேட் ஆகவில்லை. உடனடியாக ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மோசடி செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து வங்கி கடன் பெற்று தருவதாக கூறி விவசாயிகளை குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் மோடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி மோசடி

இதனை தொடர்ந்து மொபைல் போன் எண்ணிற்கு பல லட்சம் ரூபாய் பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளது. அதை எடுக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி மோசடியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து ஒன்பது நிமிடங்களில் ரூ2.45 லட்சத்தை சைபர் கிரைம் குற்றவாளிகள் திருடி உள்ளனர்.  நைஜீரியாவைச் சேர்ந்த நபர்கள்  டெல்லியில் முகாமிட்டு, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ இருக்கும் மர்ம நபர்களை நம்பி பொதுமக்கள், ஓ.டி.பி எண் மட்டுமல்ல எந்த தகவல்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget