மேலும் அறிய
Advertisement
Cuddalore: இலங்கை To நார்வே; நார்வே To கடலூர்...கடலூர் வாலிபரை கரம் பிடித்த நார்வே பெண்
நார்வேயில் பணிபுரிந்த போது மலர்ந்த காதல் - தமிழ் கலாச்சாரம் தான் பிடிக்கும், தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே, போர்கன் பகுதியை சேர்ந்த சிவாநந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார்.
சிவாநந்தனியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர்களாக இருந்தாலும் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேயில் வந்து குடியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து அவரும் அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
காதல் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இரு குடும்பத்தினரும் பேசி, அதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும் நார்வேயில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். அதன் பிறகு இந்து கோயில்களில் தமிழ் முறைப்படி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்பொழுது நார்வே நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டதாகவும், தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்பதால் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்த நிலையில், தற்போது தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக மணமகள் தெரிவித்தார். நார்வே சென்றபோது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும், ஆனால் குடும்பச் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் குடும்ப சம்பந்தத்துடன் இந்த திருமணம் நிறைவேறி உள்ளதாக மணமகன் பாலமுருகன் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து நார்வே சென்று குடியேறிய இலங்கை தமிழர் குடும்பத்தினர், தற்பொழுது கடலூரைச் சேர்ந்த மணமகனை, கடலூருக்கு வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion