மேலும் அறிய
Advertisement
கடலூர் திமுக எம்.பியின் முந்திரி தொழிற்சாலையில் பாமக நிர்வாகி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
’’திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி.ரமேஷ் மீது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு’’
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக டிஆர்பி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பயத்தில் இருந்தனர். இந்த நிலையில் கோவிந்தராஜனின் மகனுக்கு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் தொலைபேசியில் இருந்து உங்கள் தகப்பனார் இறந்து விட்டார் என்று தகவல் கூறியதாக உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. பின் அதன்பேரில் சென்னையில் இருந்து விரைந்து வந்த மகன் இறந்தவரின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் அறிந்து அதை சென்று பார்த்தபோது அவர் உடல் முழுவதும் காயங்கள் கண்ணம் காது போன்ற பல இடங்களில் காயம் இருந்துள்ளது இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜன் உறவினர்கள் மற்றும் பாமகவினர் கோவிந்தராஜனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது புகார் கொடுக்கப் பட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாகவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து மேலும் பிரேத பரிசோதனைக்கு குழுவாக டாக்டர்களை அமைத்து அதுவும் வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனையின் போது உறவினர்கள் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர், இறந்த நபர் பாமக நிர்வாகி என்பதால் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடலூரில் மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என பாமக வினர் தெரிவிதிருந்தனர். இந்த நிலையில் கோவிந்தராஜின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோவிந்தராஜின் உடல் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர், பின் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் படி இறந்த கோவிந்தராஜின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நான்கு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது. பின் தற்பொழுது அந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார், அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion